இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நான் வேண்டாம் என்று மறுக்க இதுவே காரணம் – பாண்டிங் பேட்டி

Ponting
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருடன் தனது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளருக்கான தேடலின் முடிவில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அதிகாரபூர்வமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்று பிசிசிஐ உறுதிசெய்தது.

dravid

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது ராகுல் டிராவிட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவரின் வருகையால் நிச்சயம் இந்திய அணி வலுப்பெறும் என்று அனைவரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் டிராவிட்டுக்கு முன்னால் தனக்கு பிசிசிஐ-யிடமிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்கும் படி ஆஃபர் வந்ததாகவும், அதனை ஏன் மறுத்தேன் என்பது குறித்தும் தற்போது ரிக்கி பாண்டிங் தற்போது சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :

Ponting

இந்திய அணியின் பயிற்சியாளராக நான் மாறும் பட்சத்தில் இந்தியாவிலேயே 300 நாட்கள் கிட்டத்தட்ட தங்க வேண்டிய நிலை ஏற்படும், அதை நான் விரும்பவில்லை. எனக்கு இப்போது உள்ள பதவிகளை போதும் என்று நினைத்தேன். அதுமட்டுமின்றி டெல்லி அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக நான் விரும்பவில்லை இதுபோன்ற சில காரணத்தினாலேயே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை மறுத்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : தம்பி நீங்க ரொம்ப நல்லா ஆடுறீங்க. ஆனா போட்டியை பினிஷ் செய்ய கத்துக்கோங்க – கம்பீர் அறிவுரை

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியிடம் இருந்தும் எனக்கு பயிற்சியாளராக வரும்படி அழைப்பு வந்தது. நான் எனது குடும்பத்துடன் நேரத்தை விட விரும்பவே அதனை மறுத்து எனக்கு தேவையான சில பணிகளை செய்து வருகிறேன் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement