
சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. இந்து தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி செல்லும் என்ற எதிர்பார்ப்பும் கலைந்தது. இந்த தொடரில் இந்திய அணி பெற்ற தோல்வி ரசிகர்களை வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் போது இரண்டாம் இன்னிங்சில் சதம் அடித்த விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி மீதமுள்ள நான்கு போட்டிக்களிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த முதல் போட்டியை தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திணார்.
அதிலும் குறிப்பாக விராட் கோலி ஒரே மாதிரியான ஷாட் விளையாடி ஆட்டமிழந்தது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கியது. அதோடு இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 9 இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி 23 ரன்கள் சராசரியுடன் 190 ரன்கள் மட்டுமே குவித்தது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக மாறியது.
அதனை தொடர்ந்து விராட் கோலி மீண்டும் பார்மை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பலரும் தங்களது ஆலோசனை தெரிவித்து கொள்கின்றனர். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி சொதப்ப என்ன காரணம்? என்பது குறித்த சில கருத்துக்களை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் : இந்த ஆஸ்திரேலியா தொடரின் போது விராட் கோலி பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். அதிலும் குறிப்பாக ரன் குவிக்க வேண்டும் என்று அவர் கொஞ்சம் ஆர்வமாக விளையாடியதால் வெளியில் வந்த பந்துகளையும் அடித்து ஆட்டமிழருந்தார். என்னை பொருத்தவரை இந்த தொடரில் அவரது மனக்கட்டுப்பாடு சரியாக இல்லை என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : ஃபார்ம் அவுட் கிடையாது.. ரொம்ப ட்ரை பண்ணாதீங்க.. விராட் கோலி தடுமாற இதான் காரணம்.. ரிக்கி பாண்டிங்
அதன் காரணமாகவே அவர் பந்தை அடிக்க ஆசைப்பட்டு ஆட்டமிழந்துள்ளார். ஆனால் அவர் ஒரு சிறந்த பிளேயர் நிச்சயம் இந்த சரிவிலிருந்து அவரால் மீண்டு வர முடியும். இனிவரும் போட்டிகளில் கவனம் செலுத்தி பந்திற்கு மரியாதை கொடுத்து நிதானமாக விளையாடினால் நிச்சயம் விராட் கோலியால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.