ஃபார்ம் அவுட் கிடையாது.. ரொம்ப ட்ரை பண்ணாதீங்க.. விராட் கோலி தடுமாற இதான் காரணம்.. ரிக்கி பாண்டிங்

Ricky Ponting
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த தோல்விக்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பான விராட் கோலி சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது. குறிப்பாக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் தொடர்ச்சியாக தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தது இந்திய ரசிகர்களையே ஏமாற்றமடைய வைத்தது.

அந்த வகையில் சுமாரான ஃபார்மில் இருக்கும் விராட் கோலி பேசாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறலாம் என்று இந்திய ரசிகர்களே விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் விராட் கோலி ஃபார்ம் அவுட் கிடையாது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். மனதளவில் ஏற்பட்டுள்ள தேக்கமே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் அவுட்டாக காரணம் என்றும் பாண்டிங் கூறியுள்ளார்.

- Advertisement -

அதிகமாக முயற்சி வேண்டாம்:

எனவே அதிகமாக முயற்சிக்காமல் விளையாடுவதே விராட் கோலி திரும்பி அசத்துவதற்கான வழி என்றும் பாண்டிங் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கான சவால் அவர் எந்தளவுக்கு அசத்த விரும்புகிறார் என்பதைப் பொறுத்ததாகும். தற்சமயத்தில் அவர் மிகவும் அதிகமாக முயற்சி செய்கிறார்”

“அதுவே அவருடைய பேட்டிங்கை இன்னும் கடினமாக மாற்றுகிறது. சில நேரங்களில் நீங்கள் கடினமாக முயற்சிக்கும் போது குறைவான வெற்றி மட்டுமே கிடைக்கும். அப்படி செய்யும் போது அதிகமாக ரன்கள் குவிப்பதை விட அவுட்டாகாமல் இருப்பதைப் பற்றி சிந்திக்கத் துவங்குவீர்கள். இப்படி சொல்வது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் அதுதான் நிதர்சனமாகும்”

- Advertisement -

பாண்டிங் அட்வைஸ்:

“நானும் என்னுடைய அணிக்காக தேவைப்படும் சமயத்தில் மிகவும் கச்சிதமாக விளையாடி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க முயற்சித்தேன். ஆனால் அது வேலை செய்யவில்லை. அதனால் அதைப்பற்றி அதிகம் சிந்திக்காமல் என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக விளையாடினேன். அப்படி நான் தடுமாறிய நிலையை கொஞ்சம் தற்போது விராட் கோலியிடம் பார்க்கிறேன்”

இதையும் படிங்க: ஆல் ஏரியாவிலும் வெறித்தனம்.. ஆம்ப்ரோஸ், மெக்ராத்தை விட பும்ரா அதுல கிரேட் பவுலர்.. மைக்கேல் கிளார்க்

“விராட் கோலி அந்தப் பந்துகளை விளையாட விரும்பவில்லை. ஆனால் மனதளவில் அவரிடம் இருக்கும் தேக்கம் அவுட் சைட் ஆஃப் பந்துகளை அவருக்கு கடினமாக காட்டுகிறது” என்று கூறினார். முன்னதாக 2019க்குப்பின் சதமடிக்காமல் தடுமாறிய போது விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என்று ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. அப்போது மனம் தளராத அவர் சதத்தை அடித்து ஃபார்முக்கு திரும்பி சில சிறப்பான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விராட் கோலி அசத்தும் காலங்கள் தொலைவில் இல்லை என்று நம்பலாம்.

Advertisement