ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 3 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக ஜஸ்ப்ரித் பும்ராவின் வரலாறு காணாத போராட்டம் வீணானது என்றே சொல்லலாம். ஏனெனில் ஐந்து போட்டிகளில் 32 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்தார்.
இருப்பினும் முகமது சிராஜ், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட மற்ற வீரர்களின் சுமாரான ஆட்டத்தால் இந்தியா தோல்வியை சந்தித்தது. அப்படி இந்தியா தோல்வியை சந்தித்திருந்தாலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு அந்தத் தொடரின் தொடர்நாயகன் விருதை ஆஸ்திரேலியா பரிசாக கொடுத்து பாராட்டியது.
கிளார்க் வியப்பு:
இந்நிலையில் கிளன் மெக்ராத், கர்ட்லி ஆம்ப்ரோஸ் போன்ற ஜாம்பவான் பவுலர்களை விட ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் சிறந்த பவுலர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டியுள்ளார். குறிப்பாக டெஸ்ட், ஒருநாள், டி20 உட்பட உலகின் எந்த வகையான சூழ்நிலைகளிலும் ஆல் ஏரியாவிலும் அசத்தும் திறமை அவரிடம் உள்ளதாக கிளார்க் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்தத் தொடரின் முடிவில் ஜஸ்ப்ரித் பும்ரா வெளிப்படுத்திய செயல்பாடுகளை நான் அமர்ந்து நினைத்துப் பார்க்கிறேன். உண்மையில் அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த பவுலர் என்று நான் நினைக்கிறேன். கிளன் மெக்ராத், கர்ட்லி ஆம்ப்ரோஸ் போன்ற மகத்தான நிறைய பவுலர்கள் எனக்கு தெரியும். இருப்பினும் அவர்களுக்கு டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை”
வெறித்தன பும்ரா:
“அதனால் அதில் அவர்களுடைய செயல்பாடுகள் பற்றி நான் பேசவில்லை. ஆனால் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய பவுலர்களில் பும்ரா மிகவும் சிறந்த பவுலர் என்று நான் நினைக்கிறேன். அவர் அந்தளவுக்கு அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் நன்றாக செயல்படுகிறார். அதுவே அவரை கிரேட் பவுலராக காட்சிப்படுத்துகிறது”
இதையும் படிங்க: இடிச்சதால் எதிரியல்ல.. லெஜெண்ட் கோலி தான் என் ரோல் மாடல்.. அதுக்கு வாழ்த்து சொன்னாரு.. கோன்ஸ்டஸ் பேட்டி
“உலகின் எந்த சூழ்நிலைகளிலும் எந்த ஃபார்மட்டிலும் அவர் வெறித்தனமானவர்” என்று கூறினார். அதே பேட்டியில் பும்ராவை அதிகமாக பவுலிங் செய்ய வைத்து ஆஸ்திரேலிய அணி சோர்வடைய வைத்ததாக மற்றொரு முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறினார். அதனால் கடைசியில் காயத்தை சந்தித்த பும்ரா விளையாட முடியாமல் போனது ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை பும்ரா விளையாடியிருந்தாலும் ஆஸ்திரேலியா போராடி வென்றிருக்கும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.



