ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு பெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. முன்னதாக அந்தத் தொடரில் அறிமுகமான 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ராவை அதிரடியாக எதிர்கொண்டார். அதற்கு பதிலடியாக விராட் கோலி அவருடைய தோளில் இடித்து தள்ளினார். அதன் காரணமாக ஐசிசி அவருக்கு 20% போட்டி சம்பளத்தை அபராதமாகவும் விதித்தது.
மேலும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் விராட் கோலிக்கு எதிராக சொல்லிட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆஸ்திரேலிய பத்திரிகைகள் விராட் கோலியை கோமாளி என்ற சித்தரித்து வில்லனாக காட்டின. அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் கிங் என்று அழைக்கப்பட்ட விராட் கோலி தற்சமயத்தில் எதிரியாக பார்க்கப்படுகிறார் என்றே சொல்லலாம்.
என்னோட ரோல் மாடல்:
இருப்பினும் அந்த நிகழ்வு நடைபெற்ற 4வது போட்டி முடிந்ததும் சாம் கோன்ஸ்டஸை நேராக சந்தித்து விராட் கோலி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் ஐந்தாவது போட்டிக்கு முன் ஆஸ்திரேலிய பிரதமரை இரு அணிகளும் சந்தித்த போது அவருடன் விராட் கோலி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த வகையில் போட்டியெல்லாம் களத்தில் மட்டுமே களத்திற்கு வெளியே தாம் ஜென்டில்மேன் என்பதை விராட் கோலி நிரூபித்தார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தம்முடைய ரோல் மாடலான விராட் கோலி அடுத்து நடைபெறும் இலங்கை தொடரில் அசத்துவதற்காக தமக்கு வாழ்த்து தெரிவித்ததாக சாம் கோன்ஸ்டஸ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “போட்டி முடிந்ததும் விராட் கோலியுடன் நான் கொஞ்சம் பேசினேன். அப்போது நான் உங்களை ரோல் மாடலாக கொண்டுள்ளேன் என்பதை சொன்னேன்”
லெஜெண்ட் கோலி:
“கண்டிப்பாக அவருக்கு எதிராக விளையாடுவது மிகப்பெரிய கௌரவம். அவருக்கு எதிராக விளையாடிய போது “வாவ் விராட் கோலி பேட்டிங் செய்கிறார்” என்ற வகையில் நான் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன். களத்தில் அவர் இருக்கும் போது இந்திய ரசிகர்கள் அவருடைய பெயரை சத்தமாக உச்சரித்தார்கள். அந்த தருணம் நம்ப முடியாததாக இருந்தது. அவர் பூமியை போன்ற குணத்தை கொன்றவர்”
இதையும் படிங்க: நிதிஷ் ரெட்டி மாதிரி ஆஸியில் சர்பராஸ் அசத்திருப்பாரு.. ஆனா அதை வெச்சு வீணடிச்சுட்டிங்களே.. சஞ்சய் மஞ்ரேக்கர்
“அன்பான நபர். அடுத்ததாக நடைபெறும் இலங்கை சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக செயல்படுங்கள் என்று எனக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். எங்களுடைய மொத்த குடும்பமும் விராட் கோலியை விரும்புகிறது. இளம் வயதிலிருந்தே அவரை நான் ரோல் மாடலாக கொண்டுள்ளேன். அவர் இந்த விளையாட்டின் லெஜெண்ட்” என்று கூறியுள்ளார்.



