நிதிஷ் ரெட்டி மாதிரி ஆஸியில் சர்பராஸ் அசத்திருப்பாரு.. ஆனா அதை வெச்சு வீணடிச்சுட்டிங்களே.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை பைனலுக்குச் செல்லும் வாய்ப்பையும் இந்தியா நழுவ விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே சமயம் ஜெய்ஸ்வால், நித்திஷ் ரெட்டி போன்ற இளம் வீரர்கள் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு போராடியது ஆறுதலாக அமைந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்பராஸ் கானுக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவில் சர்பராஸ் கான் அசத்த மாட்டார் என்ற கண்ணோட்டத்துடன் இந்திய அணி அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

சர்பராஸ் வாய்ப்பு:

ஒருவேளை ஆஸ்திரேலியாவில் அசத்த மாட்டார் என்று விமர்சனத்திற்குள்ளான நித்திஷ் ரெட்டி கடைசியில் அபாரமாக விளையாடியதை போல் வாய்ப்பு கொடுத்திருந்தால் சர்பராஸ் கானும் அசத்தியிருப்பார் என்றும் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். அதை இந்திய அணி சர்பராஸ் கானை குறைத்து மதிப்பிட்டு வீணடித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தியதால் சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது”

“அந்த வாய்ப்பில் இந்தியாவுக்காக அவர் 3 அரை சதங்கள் ஒரு 150 ரன்கள் அடித்தார். ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் சுமாராக அவுட்டானதால் அவரை இந்திய அணி தூக்கி எறிந்தது. அது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. ஆஸ்திரேலிய பிட்ச்களில் சர்பராஸ் கான் அசத்த முடியாது என்று நீங்கள் கருதலாம். ஒருவேளை அவர் அங்கே ரன்கள் குவிப்பதற்கான வழியை கண்டறிந்தால் என்ன நடந்திருக்கும்?”

- Advertisement -

இங்கிலாந்து தொடர்:

“ஆஸ்திரேலியாவில் வாய்ப்பு கொடுத்திருந்தால் கடந்த இங்கிலாந்துக்கு எதிராக அவர் எப்படி விளையாடினார் என்ற தெளிவும் உங்களுக்கு கிடைத்திருக்கும். அந்த வகையில் இதற்கு முந்தைய போட்டிகளில் ரன்கள் அடித்த வீரருக்கு நீங்கள் வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: முடிஞ்சா பேட்டால் பதிலடி கொடுங்க.. அதை விட்டுட்டு அவங்களோட மோதி ஹீரோவாகாதீங்க.. கோலியை சாடிய கவாஸ்கர்

அடுத்ததாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடுவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஒருவேளை அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பலாம்.

Advertisement