- Advertisement -
உலக கிரிக்கெட்

பயிற்சியாளராக சர்வதேச கிரிக்கெட் வேண்டாம்.. ஐ.பி.எல் மட்டுமே போதும்.. ரிக்கி பாண்டிங் முடிவு – ஏன் தெரியுமா?

அண்மையில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் முதன்மை பயிற்சியாளர் பதவியில் இருந்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ரிக்கி பாண்டிங் நீக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் கடந்த பல ஆண்டுகளாக அந்த அணி எந்தவொரு முன்னேற்றத்தையும் காணாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்பிறகு அவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பல்வேறு அணிகள் தங்கள் அணிக்கு முதன்மை பயிற்சியாளராக மாற்ற விரும்பி வருகின்றன.

இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த ஐ.சி.சி தொடர் தோல்விகளால் அந்த அணியின் வெள்ளைப்பந்து பயிற்சியாளர் மேத்யூ மோட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிவுக்கு வர 2 ஆண்டுகள் இருந்தும் அவர் முன்கூட்டியே அந்த பதவியில் இருந்து விலகியுள்ளதால் தற்போது புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக வர குமார் சங்கக்காரா, இயான் மோர்கன், ரிக்கி பாண்டிங் ஆகியோரது பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அவர்களுடன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பெயரும் பரிசீலனை பட்டியலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட் அணிகளை விட, ஐ.பி.எல் அணிகளுக்கே பயிற்சியாளராக இருக்க விரும்புவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உண்மையிலேயே தற்போது எனக்கு சர்வதேச அணிக்காக பயிற்சியாளராக இருக்க நேரமில்லை. ஒரு சர்வதேச அணிக்கு பயிற்சியாளராக இருக்க வேண்டுமெனில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.

- Advertisement -

அனால் எனது வர்ணனையாளர் பணிகள், இதர பணிகள் மற்றும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என பல காரணங்களால் தற்போது என்னால் முழுநேர பயிற்சியாளராக செயல்பட முடியாது. எனவே இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் நான் பயிற்சியாளராக செயல்பட மாட்டேன். தற்போதே அவர்கள் என்னுடைய பெயரை அந்த பட்டியலில் இருந்து நீக்கி விடலாம்.

இதையும் படிங்க : நீரஜ் சோப்ராவை வச்சி இப்படியா விளம்பரம் தேடுவீங்க.. ரிஷப் பண்டின் செயலை கண்டித்த – இந்திய வீரர் கோஸ்வாமி

ஆனாலும் ஐ.பி.எல் தொடரில் நான் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் நான் ஒரு வீரராக இருந்தபோதும் சரி, பயிற்சியாளராக இருந்தபோதும் சரி ஐ.பி.எல் தொடர்களில் நிறைவுடன் செயல்பட்டு இருக்கிறேன். அதேபோன்று ஐ.பி.எல் தொடரில் மட்டும் நான் பணியாற்றினால் என்னால் என் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முடியும் என ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -