காயம் இருந்தும் கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் சாஹலை விளையாட வைத்தது ஏன்? – பாண்டிங் விளக்கம்

Ponting and Chahal
- Advertisement -

சண்டிகார் நகரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டியானது பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் சற்றும் குறைவின்றி அசத்தலாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

காயம் இருந்தும் யுஸ்வேந்திர சாஹலை விளையாட வைத்தது ஏன்? : ரிக்கி பாண்டிங்

இதன் காரணமாக இந்த போட்டியில் வெகு எளிதாக கொல்கத்தா அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் பாதியில் கொல்கத்தா அணி பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே குவித்ததால் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்று ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த ரன்களை வைத்து எதிரணியை வீழ்த்திய அணியாக மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஒரு கட்டத்தில் 62 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த கொல்கத்தா அணி அடுத்த 33 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து மாபெரும் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்த பஞ்சாப் அணி சார்பாக மிக முக்கியமான வீரராக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் திகழ்ந்தார்.

ஏனெனில் இந்த போட்டியின் போது அஜின்க்யா ரஹானே, ரகுவன்சி, ரிங்கு சிங், ரமன்தீப் சிங் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இந்த போட்டியின் போது 4 ஓவர்கள் பந்துவீசிய அவர் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து சாஹலின் பந்துவீச்சு குறித்தும் அவர் இந்த போட்டியில் விளையாடியது குறித்தும் பேசியிருந்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே இந்த போட்டிக்கு முன்னதாக அவர் கடந்த போட்டியின் போது தோள்பட்டை பகுதியில் காயமடைந்து இருந்ததால் கொல்கத்தா போட்டியில் விளையாட வைக்கலாமா? வேண்டாமா? என்றெல்லாம் யோசித்தோம். அதனால் இந்த கொல்கத்தா அணிக்கெதிரான போட்டிக்கு முன்னதாக அவருக்கு பிட்னஸ் டெஸ்ட் வைக்கப்பட்டிருந்தது. மேலும் பயிற்சியின் போதும் அவரை நாங்கள் பந்துவீச வைக்கவில்லை.

இதையும் படிங்க : பாகுபலி தோனி கேப்டனாக வந்ததும் உலகிற்கு காட்டிட்டாரு.. இதை மாத்தலன்னா நல்லாருக்கும்.. வாழ்த்திய ஹர்பஜன்

இருந்தாலும் போட்டிக்கு முன்பாக நான் அவரது கண்களை பார்த்து “நீ ஓகே-வாக இருக்கிறாயா?” என்று கேட்டேன். அதற்கு சாஹல் என்னிடம் : சார் 100% நான் நன்றாக இருக்கிறேன். என்னை விளையாட அனுமதியுங்கள் என்று கேட்டார். அதன் பின்னரே அவரை விளையாட வைத்தோம். அப்படி விளையாடி எங்களுக்காக அவர் போட்டியில் வெற்றியும் பெற்றுக்கொடுத்துள்ளார் என பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement