பாகுபலி தோனி கேப்டனாக வந்ததும் உலகிற்கு காட்டிட்டாரு.. இதை மாத்தலன்னா நல்லாருக்கும்.. வாழ்த்திய ஹர்பஜன்

Harbhajan Singh
- Advertisement -

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி தங்களது முதல் போட்டியிலேயே மும்பைக்கு எதிராக வென்றது. ஆனால் அதற்கடுத்த 5 போட்டிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர்ந்து சென்னை 5 தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக சேப்பாக்கத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக மோசமாக பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 103/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆனால் அதை கொல்கத்தா 10.1 ஓவரில் எடுத்து எளிதாக வென்றது. அந்தளவுக்கு மோசமாக விளையாடிய சென்னை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்ததால் கதை முடிந்ததாக பார்க்கப்பட்டது. ஏனெனில் ருதுராஜ் காயத்தை சந்தித்ததால் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற தோனி தலைமையில் கொல்கத்தாவுக்கு எதிராக சென்னை அப்படி ஒரு மோசமான தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

பாகுபலி தோனி:

இருப்பினும் அதற்காக அசராத தோனி லக்னோவுக்கு எதிராக அஸ்வின், கான்வே போன்ற மூத்த வீரர்களை நீக்கி தேவையான மாற்றங்களை செய்து கேப்டனாக அசத்தினார். அத்துடன் விக்கெட் கீப்பிங் மற்றும் ஃபினிஷிங் வேலையிலும் அட்டகாசமாக செயல்பட்ட அவர் ஆட்டநாயகன் விருது வென்று சென்னை 2வது வெற்றியைப் பதிவு செய்ய உதவினார். இந்நிலையில் பாகுபலி போன்ற தோனி கேப்டனாக வந்ததும் சிஎஸ்கே அணியில் அனைத்தும் மாறியுள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் பேட்டிங்கில் தோனி ஒரேடியாக கீழே களமிறங்காமல் லக்னோவுக்கு எதிரான போட்டியை போல சரியான நேரத்தில் விளையாட வந்தால் கண்டிப்பாக சிஎஸ்கே தொடர்ச்சியாக வெல்லும் என்று அவர் கூறியுள்ளார். ஏனெனில் தோனிக்கு எப்போதும் அதிர்ஷ்டம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனி பாகுபலி. பேட்டிங்கில் மேலே பேட்டிங் விளையாட வந்தால் இந்த கேப்டனால் என்ன செய்ய முடியும் என்பதை அவர் உலகிற்கு காண்பித்தார்”

- Advertisement -

ஹர்பஜன் பாராட்டு:

“ஒன்பதாவது இடத்தில் விளையாடுவது அவருக்கு பொருந்தவில்லை. லக்னோவுக்கு எதிராக சரியான இடத்தில் பேட்டிங் செய்த அவர் சூப்பராக விளையாடினார். தனது சொந்த ரன்கள் அடித்த அவர் துபேவுக்கும் உதவி செய்தார். இப்போதும் திறமையைக் கொண்டுள்ள தோனி கடிகாரத்தை திருப்பினார். பவுலிங் மாற்றங்களை சிறப்பாக செய்த அவர் கேப்டனாக வந்ததும் அனைத்தும் வித்தியாசமாக தெரிகிறது”

இதையும் படிங்க: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக உமேஷ் யாதவ் நிகழ்த்தியிருந்த சாதனையை முறியடித்த சுனில் நரேன் – விவரம் இதோ

“அவரும் வித்தியாசமாக பேட்டிங் செய்தார். சரியான நேரத்தில் பேட்டிங் செய்ய வந்த அவர் 26* (11) ரன்கள் அடித்து லக்னோவை அழுத்தத்தில் தள்ளினார். தோனி கேப்டனாக வந்ததும் அவரது தலைமையில் அணி வித்தியாசமாக விளையாடுகிறது. எனவே வெல்டன் சிஎஸ்கே. தோனிக்கு வாழ்த்துக்கள். அப்துல் சமத்தை அவர் ரன் அவுட் செய்ததும் அதிர்ஷ்டம் இருக்கிறது. தோனிக்கு எப்போதும் அதிர்ஷ்டம் அற்புதங்களை நிகழ்த்துகிறது. தோனி இருக்கும் போது அனைத்தும் சாத்தியம்” என்று கூறினார்.

Advertisement