இவர் ஒருத்தர் போதும். டி20 உலகக்கோப்பையை ஜெயிச்சி குடுக்க. அவ்ளோ பவரான பிளேயர் – பாண்டிங் புகழாரம்

Ponting
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் டி20 உலக கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளின் வீரர்களின் பட்டியலையும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்ததால் தற்போது ஒவ்வொரு அணியாக தங்களது உலகக்கோப்பை அணியை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதல் அணியாக தங்களது வீரர்களின் பட்டியலை அறிவித்தது.

aus 1

- Advertisement -

அதன்படி கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த மிச்சல் சுவப்சன் மட்டும் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்டு தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு குடிபெயர்ந்த டிம் டேவிட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அணிக்காக கடந்த 2019 முதல் 2020 ஆம் ஆண்டு வரை டி20 கிரிக்கெட்டில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள டிம் டேவிட் 46 ரன்கள் சராசரியுடன், 158 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 558 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அதோடு ஐபிஎல் தொடரிலும் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 210 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 187 ரன்கள் குவித்துள்ளார்.

உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் முதன்மை அதிரடி வீரராக பங்கேற்று விளையாடி வரும் இவர் தற்போது ஆஸ்திரேலிய நாட்டின் குடியுரிமையை பெற்றதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உலகின் எந்த மைதானத்திலும் மிக எளிதாக பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசும் திறன் உடைய இவர் ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பலத்தினை அளிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Tim-David

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் சேர்க்கப்பட்டது குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூறுகையில் : கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அவர் பிக் பேஷ் லீக்கில் கூட பங்கேற்பதில் கஷ்டப்பட்டு வந்தார். ஆனால் தற்போது அவர் டி20 கிரிக்கெட்டில் உலகின் மிக அபாயகரமான வீரராக திகழ்கிறார். ஐபிஎல் தொடரின் போது நான் அவரை அருகில் இருந்து கவனித்துள்ளேன். அவர் ஒரு தொடரில் ஒன்று இரண்டு போட்டிகளை மட்டும் வெற்றி பெற்று தரக்கூடிய வீரர் கிடையாது.

- Advertisement -

நிச்சயம் அவரால் ஒரு தொடரையே வெற்றி பெற்று கொடுக்கக்கூடிய ஆற்றல் உடையவர். அவருடைய பேட்டிங் திறன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 2003-ஆம் ஆண்டு எங்களது அணியில் விளையாடிய ஆண்ட்ரு சைமன்சுடன் நான் இவரை ஒப்பிட விரும்புகிறேன். ஏனெனில் ஆண்ட்ரு சைமன்ஸ் ஒரு தொடரையே கைப்பற்றி கொடுத்த மாபெரும் வீரர்.

இதையும் படிங்க : விராட் கோலி 3வது இடத்தில் ஆடக்கூடாது – புதிய வீரருக்காக கம்பீர் கோரிக்கை, கடுப்பில் ரசிகர்கள்

அவரைப் போன்று டிம் டேவிடும் ஒன்று இரண்டு போட்டிகளில் அல்லாது ஒரு தொடரையே வென்று கொடுக்கக்கூடிய அளவு அபாயகரமான வீரர். நிச்சயம் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு வலு சேர்ப்பார் என பாண்டிங் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது. 26 வயதான அதிரடி வீரர் டிம் டேவிட் இதுவரை 115 டி20 போட்டிகளில் விளையாடி 164 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2640 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement