- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய டி20 அணியில் கேப்டனாக இவருக்கு வாய்ப்பு குடுத்தா சரியா இருக்கும் – ரிக்கி பாண்டிங் கருத்து

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய டி20 அணி 2024 டி20 உலகக்கோப்பை தொடரை கைப்பற்றியிருந்த வேளையில் அடுத்த தொடரையும் கைப்பற்றிய இந்திய அணி அடுத்தடுத்த டி20 உலக கோப்பையை தொடர்களை வென்ற முதல் அணியாகவும், மூன்று முறை டி20 உலக கோப்பையை வென்று அதிகமுறை டி20 சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் சாதனையை நிகழ்த்தியிருந்தது.

அடுத்த இந்திய டி20 கேப்டன் இவர்தான் : ரிக்கி பாண்டிங் கருத்து

அதனை தொடர்ந்து எதிர்வரும் 2028 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் அணியை சிறப்பாக வழிநடத்தினாலும் அவரது தனிப்பட்ட பேட்டிங் ஃபார்ம் மற்றும் வயது ஆகியவற்றை காரணம் காட்டி அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி வேறொரு வீரருக்கு கேப்டன் பதவி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் சூரியகுமார் யாதவுக்கு அடுத்து இந்திய டி20 அணியின் கேப்டன்சி வாய்ப்பு ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவருக்கு செல்லலாம் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் பொறுப்பிற்கு ஷ்ரேயாஸ் ஐயர் சரியான நபர் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவுக்கு அடுத்து இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சில போட்டியாளர்கள் உள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : கடைசி லீக் போட்டிக்கு முன்னதாக சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறிய தல தோனி – காரணம் என்ன?

அவர்களில் முதன்மையானவராக நான் ஷ்ரேயாஸ் ஐயரை கருதுகிறேன். ஏனெனில் தனது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலே தற்போது தான் அவர் மிகவும் முதிர்ச்சி அடைந்த வீரராக திகழ்கிறார். அதோடு அவரது பேட்டிங் பார்மும் சிறப்பாக இருப்பதால் தற்போது அவரை டி20 அணியின் கேப்டனாக மாற்றுவது சரியான தேர்வாக இருக்கும் என ரிக்கி பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -