சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மஹேந்திர சிங் தோனி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக கணுக்கால் பகுதியில் ஏற்பட தசைப்பிடிப்பு காரணமாக ஆரம்பகட்ட போட்டிகளை தவறவிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த தொடரின் கடைசி கட்ட லீக் போட்டிகளில் தோனி பங்கேற்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
சி.எஸ்.கே அணியிலிருந்து வெளியேறிய தல தோனி :
ஆனால் தோனி இதுவரை நடைபெற்றுள்ள 13 லீக் ஆட்டங்களிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கும் வேளையில் இந்த போட்டியிலும் தோனி பங்கேற்க மாட்டார் என்று உறுதியாகியுள்ளது.
ஏனெனில் அகாமதாபாத் நகரில் நடைபெறும் இந்த போட்டிக்காக சி.எஸ்.கே அணி வீரர்கள் அங்கு பயணித்து விட்டனர். ஆனால் தோனி சி.எஸ்.கே அணியுடன் பயணிக்காமல் நேரடியாக அவர் தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு புறப்பட்டுள்ளார் என்ற உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே சென்னை அணி விளையாடும் போட்டிகளில் தோனி இடம்பெறாமல் இருந்தாலும் ஹோட்டல் அறையில் தங்கி பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
ஆனால் இம்முறை சி.எஸ்.கே அணியுடன் இணைந்து இருக்காமல் அவர் நேரடியாக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதால் அவர் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தோனியின் இந்த செயல் குறித்து பேசியுள்ள சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹஸி கூறியதாவது :
இதையும் படிங்க : இப்படி எல்லாம் பண்ணக்கூடாது.. 10% அபராதத்துடன் ஒரு தகுதி இழப்பு புள்ளியை பெற்ற – ஹார்டிக் பாண்டியா
தற்போதைக்கு தோனி எங்களது அணியுடன் இல்லை. ஒருவேளை சி.எஸ்.கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவார். அவருக்கு கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அணியிலிருந்து வெளியேறி சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாகவும் மைக்கல் ஹசி கூறியது குறிப்பிடத்தக்கது.



