இப்படி எல்லாம் பண்ணக்கூடாது.. 10% அபராதத்துடன் ஒரு தகுதி இழப்பு புள்ளியை பெற்ற – ஹார்டிக் பாண்டியா

Pandya Fine
- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 65-வது லீக் போட்டியில் விளையாடியிருந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

ஹார்டிக் பாண்டியாவுக்கு அபராதம் விதிப்பு :

இதன் மூலம் மும்பை அணி இந்த தொடரில் தங்களது ஒன்பதாவது தோல்வியை பதிவு செய்து பரிதாப நிலையை சந்தித்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்தது.

- Advertisement -

அடுத்ததாக கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி அவர்களுக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பையும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டனாக விளையாடிய ஹார்டிக் பாண்டியாவிற்கு 10% அபராதமும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம் யாதெனில் : நேற்றைய இந்த போட்டியின் போது கொல்கத்தா அணிக்கு எதிராக பத்தாவது ஓவரை வீசிய ஹார்டிக் பாண்டியா நான்காவது பந்தை வீசிவிட்டு ஐந்தாவது பந்தை வீச சென்றபோது திடீரென ஆவேசமடைந்து ஸ்டம்புகளை எட்டி உதைத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் கொல்கத்தா அணியிடம் தோக்க காரணம் – ஹார்டிக் பாண்டியா வருத்தம்

பாண்டியாவின் இந்த செயல் ஐ.பி.எல் நடத்தை விதிகளில் 2.2 விதிகளை மீறியதாக இருந்தது. அதாவது களத்தில் உள்ள கிரிக்கெட் பொருளை சேதப்படுத்தியதாக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு பாண்டியாவும் அபராதத்தை ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement