நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் கொல்கத்தா அணியிடம் தோக்க காரணம் – ஹார்டிக் பாண்டியா வருத்தம்

Hardik Pandya
- Advertisement -

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 65-வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடி மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்த தொடரில் ஒன்பதாவது தோல்வியை பெற்ற மும்பை அணி மோசமான நிலையை சந்தித்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

கொல்கத்தா அணிக்கெதிரான தோல்வி குறித்து : பாண்டியா பேச்சு

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி அடைந்த தோல்வி குறித்து பேசிய கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறியதாவது :

- Advertisement -

இந்த போட்டியில் நாங்கள் 15-20 ரன்கள் வரை குறைவாக எடுத்ததாக நினைக்கிறேன். போட்டியின் ஆரம்பத்திலேயே பவர்பிளேவில் நாங்கள் விக்கெட்டுகளை இழந்ததால் அதன்பின்னர் பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்ல முடியவில்லை. ஒருவேளை திலக் வர்மாவும் நானும் சற்று நீண்ட இன்னிங்ஸ் விளையாடி இருந்தால் நிச்சயம் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருக்க முடியும்.

அதேபோன்று இந்த மைதானத்தில் இந்த ரன்களை வைத்து கொஞ்சம் சிறப்பாக பந்துவீச முடிந்தது. ஏனெனில் பொதுவாகவே பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடிய பின்னர் இந்த மைதானத்தில் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல உதவி கிடைத்தது. எனவே பந்து வீச்சாளர்கள் இந்த போட்டியில் சிறப்பாகவும் பந்துவீசினர்.

- Advertisement -

இதையும் படிங்க : நல்ல டிஸ்கஷன் தான் எல்லாத்துக்கும் காரணம்.. மும்பை அணியை வீழ்த்திய பிறகு – ரஹானே பேச்சு

இன்னும் 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருந்தால் போட்டி கடுமையாக இருந்திருக்கும். இந்த தொடர் முழுவதுமே நாங்கள் பீல்டிங்கில் பெரிய சொதப்பலை நிகழ்த்தியுள்ளோம். சரியான வாய்ப்புகளை சரியான நேரத்தில் பிடித்திருந்தால் முடிவுகள் மாறியிருக்கலாம். ஒவ்வொரு போட்டியும் நல்ல ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கிறது என ஹார்டிக் பாண்டியா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement