நிச்சயம் ஜோ ரூட்டால் ஈஸியா சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியும் – ரிக்கி பாண்டிங் கருத்து

Ponting and Root
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த வேளையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது :

சச்சினின் சாதனையை ரூட்டால் முறியடிக்க முடியும் : ரிக்கி பாண்டிங்

கடந்த ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் 358 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதன் பின்னர் தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 544 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணி சார்பாக பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடனும், லியாம் டாவ்சன் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் 248 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் அடித்த இந்த ரன்கள் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை ஜோ ரூட் பிடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள ஜோ ரூட்டால் சச்சினின் சாதனையையும் முறியடிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : இதனால தான் குல்தீப்பை எடுக்கல.. இந்தியா தடுமாற பவுலிங் காரணமில்ல.. கோச் மோர்கெல் பேட்டி

ஜோ ரூட்டின் வயது என்ன? 34 தான் ஆகிறது. இன்னும் சில ஆண்டுகள் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியும். கடந்த சில ஆண்டுகளாகவே அவருடைய ரன் குவிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. எனவே நிச்சயம் சச்சினின் சாதனையை அவரால் விரட்ட முடியுமா? என்று கேட்டால் நிச்சயம் அதை செய்ய முடியும் என்று தோன்றுவதாக பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது

Advertisement