மான்செஸ்டர் நகரில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா மோசமாக பவுலிங் செய்து வருகிறது. ஜூலை 23ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 358 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்ததாக விளையாடும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 544/7 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 186 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. அதனால் இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு 99% வாய்ப்பில்லை என்றே சொல்லலாம். இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி 84, பென் டக்கெட் 94, ஓலி போப் 71, ஜோ ரூட் 150, கேப்டன் ஸ்டோக்ஸ் 77* ரன்கள் எடுத்து இந்தியாவை கலங்கடித்தனர்.
குல்தீப் இல்லாதது ஏன்:
முன்னதாக இப்போட்டியில் இந்தியா 20 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதையெல்லாம் ஏற்காத இந்திய அணி மீண்டும் பேட்டிங்கை ஆழப்படுத்துவதற்காக தாக்கூரை தேர்ந்தெடுத்தது. அந்த முடிவு இதுவரை இந்திய அணிக்கு பெரிய சாதகத்தை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் ஏற்கனவே 2 ஸ்பின்னர்கள் இருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் சமநிலை பாதிக்கும் என்பதாலேயே குல்தீப்பை தேர்ந்தெடுக்கவில்லை என்று பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தெரிவித்துள்ளார். மேலும் பேட்டிங்கில் கொத்தாக விக்கெட்டுகளை இழந்து 400 ரன்கள் கூட எடுக்காததே இந்தியாவின் தடுமாற்றத்திற்கு காரணம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “குல்தீப்பை வைத்து எப்படி சமநிலையை காண முடியும், பேட்டிங்கை ஆழப்படுத்த முடியும் என்று பார்க்க வேண்டுமென நினைக்கிறேன்”
மோர்கெல் பதில்:
“இதற்கு முன்பும் நாங்கள் விக்கெட்டுகளை கொத்தாக இழந்ததைப் பார்த்தோம். குல்தீப் உலகத்தரம் வாய்ந்தவர். தற்சமயத்தில் நன்றாக பவுலிங் செய்கிறார். அதனால் அவரை அணிக்குள் கொண்டுவர நாங்களும் முயற்சித்து வருகிறோம். துரதிஷ்டவசமாக பேட்டிங் துறையில் சமநிலையை உண்டாக்க முயற்சிப்பது அவருடைய வருகையைக் கொஞ்சம் தூக்கி எறிகிறது”
இதையும் படிங்க: இதுக்கு முடிவை கம்பீர், ராகுல் இருக்க வாய்ப்பில்லை.. சுந்தரை துச்சமாக நினைத்த கில்லை.. விளாசிய மஞ்ரேக்கர்
“நாளின் இறுதியில் உங்களுக்கு ரன்கள் தேவை. குறிப்பாக இங்கிலாந்து போன்ற அதிரடியாக விளையாடும் அணிக்கு எதிராக 400 ரன்கள் அடிப்பதற்காக உங்களுக்கு எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்கள் தேவை. மான்செஸ்டர் பிட்ச் இதுவரை காய்ந்து கொஞ்சம் சுழல்கிறது. அது வாஷிங்டன் சுந்தர், ஜடேஜாவை பவுலிங் செய்ய கொண்டு வந்துள்ளது. குல்தீப்பை விளையாட வைக்க முயற்சிக்கிறோம். ஆனால் அதற்கு டாப் 6 பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்க வேண்டும்” என்று கூறினார்.



