எங்க நாட்டுல இந்த பழக்கமே கிடையாது – எங்கள ஜெயிக்க இந்தியாவுக்கு அதை விட்ட வேற வழி தெரியாது – ரிக்கி பாண்டிங் அதிரடி

Ricky Ponting
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா முதலில் 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியுள்ளது. ஆனால் ஏற்கனவே பைனல் வாய்ப்பை உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் தோற்கடித்து பழி தீர்க்கும் முனைப்புடன் வந்துள்ளது.

Steve Smith Harsha Bhogle

- Advertisement -

அதற்காக களமிறங்குவதற்கு முன்பாகவே 2017 இந்திய சுற்றுப்பயணத்தில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் அமைக்கப்பட்டிருந்ததாக ஸ்டீவ் ஸ்மித், இயன் ஹீலி போன்ற இந்நாள் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் விமர்சித்தனர். அதை விட பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய முதல் போட்டியில் தங்களது பேட்டிங் வரிசையில் இருக்கும் 6 இடது கை பேட்ஸ்மேன்களை இடது கை ஸ்பின்னர்களை வைத்து தாக்குவதற்காக வேண்டுமென்றே இருபுறங்களிலும் வலது பக்கத்தில் காய்ந்த தன்மையுடன் பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பாண்டிங் விமர்சனம்:
அந்த வகையில் இம்முறையும் தாங்கள் வெற்றி பெறுவதற்காக ஆரம்பத்திலேயே இந்தியா சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைத்துள்ளதாக ஆஸ்திரேலியர்கள் விமர்சித்தனர். ஆனால் கடந்த மாதம் காபாவில் பச்சை புற்கள் நிறைந்த பிட்ச்சை உருவாக்கி அதில் தென்னாப்பிரிக்காவை 2 நாட்களுக்குள் தோற்கடித்த நீங்கள் இந்தியாவை பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என சுனில் கவாஸ்கர் போன்ற இந்தியர்கள் பதிலடி கொடுத்தனர்.

IND vs AUS Rohit

அந்த நிலைமையில் நாக்பூரில் துவங்கிய முதல் போட்டியில் ஷமி, சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே கவாஜா, வார்னர் ஆகியோரை அவுட்டாக்கி பிட்ச் சுழலுக்கு சாதகமாக மட்டும் அமைக்கப்படவில்லை என்பதை நிரூபித்தனர். அதை விட ஆஸ்திரேலியாவை 177 ரன்களுக்கு சுருட்டிய இந்திய ஸ்பின்னர்களுக்கு சராசரியாக 2.9 டிகிரி சுழன்று கைகொடுத்த நாக்பூர் பிட்ச் முதல் நாளில் 1 விக்கெட் மட்டுமே எடுத்த ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களுக்கு 3.4 டிகிரி சுழன்று அதிகமாக கை கொடுத்தது.

- Advertisement -

இதிலிருந்து பிட்ச் ஒருதலைப்பட்சமாக அமைக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிய வருகிறது. இருப்பினும் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பதற்கு சுழலுக்கு சாதகமான மைதானம் அமைப்பதை தவிர இந்தியாவிற்கு வேறு வழி தெரியாது என்று தெரிவிக்கும் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தங்களது நாட்டில் மைதான பராமரிப்பாளர்களிடம் சென்று எங்களுக்கு இந்த வகையான பிட்ச் அமைத்துக் கொடுங்கள் என்று தாங்கள் எப்போதும் கேட்டதில்லை எனவும் விமர்சித்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

Ponting

“நாக்பூரில் இந்த வகையான பிட்ச் தான் இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன். அனைவரும் பார்த்தது போலவே நானும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதை பார்த்தேன். அதன் பின்பு தான் நிறைய விவாதங்கள் எழுந்தன. ஆனால் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பதற்கு சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைப்பதே இந்தியாவின் சிறந்த வழியாகும். அத்துடன் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அங்கே தடுமாறுவார்கள் என்பதும் இந்திய ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களை விட சிறந்தவர்கள் என்பதும் அவர்கள் அவ்வாறு பிட்ச் அமைப்பதற்கு காரணமாக இருந்திருக்கலாம்”

- Advertisement -

“அதே சமயம் ஆஸ்திரேலிய அணியில் 2 ஆஃப் ஸ்பின்னர்கள் விளையாடுகிறார்கள் அதில் ஒருவர் இப்போட்டியில் தான் அறிமுகமாகியுள்ளார். அது இந்தியாவுக்கு சாதகமான ஒன்றாகும். அத்துடன் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே ஒரு வித்தியாசம் இருப்பதாக நான் கணிக்கிறேன். அதாவது ஆஸ்திரேலிய வீரர்கள் பிட்ச் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்பதை எப்போதும் யாரிடமும் சொல்ல மாட்டார்கள்”

இதையும் படிங்க: ரவீந்திர ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா? ஆஸ்திரேலியர்களின் முகத்தில் கரியை பூசி நடுவரிடம் இந்தியா பதிலடி

“குறிப்பாக சமீபத்திய வருடங்களில் ஏதாவது மாறியிருக்கலாம். ஆனால் நான் விளையாடும் காரணங்களில் போட்டி முடிந்ததுமே எங்கள் அணியை சேர்ந்த யாருமே மைதான பராமரிப்பாளர்களிடம் சென்று அதைப் பற்றி பேச மாட்டோம். மாறாக சிறந்த பிட்ச்சை உருவாக்கும் பொறுப்பை மைதான பராமரிப்பாளர்களிடமே விட்டு விடுவோம்” என்று மறைமுகமாக இந்தியாவை தாக்கியுள்ளார்.

Advertisement