- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பேட்டிங் ஆவெரேஜ் 46க்கு சரிந்தாலும்.. விராட் கோலி அந்த லிஸ்ட்ல இருப்பாரு.. பாண்டிங் கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பகாலங்களில் தடுமாறினார். இருப்பினும் அப்போதைய கேப்டன் தோனியின் ஆதரவைப் பெற்ற அவர் குறுகிய காலத்திலேயே சிறப்பாக விளையாடத் துவங்கினார். 2013இல் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்கு பின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்தார்.

அப்போதிலிருந்து நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் 50கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியில் ரன்களை குவித்து வந்தார். அதனால் உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக பாராட்டப்பட்ட அவர் சமீப காலங்களில் மோசமாக பேட்டிங் செய்தார். குறிப்பாக கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் அதற்கடுத்தப் போட்டிகளில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தார்.

- Advertisement -

சராசரி குறைந்தாலும்:

அதனால் இந்தியாவின் தோல்விக்கும் காரணமான அவருடைய பேட்டிங் சராசரி 46.85 ஆக குறைந்தது. அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ரோகித் சர்மாவை தொடர்ந்து ஓய்வு பெற்றார். அதனால் 10000 ரன்களை தொடும் வாய்ப்பை இழந்த விராட் கோலி தம்முடைய கேரியரை 46.85 என்ற சராசரியுடன் முடித்தார்.

அதனால் ரெக்கார்ட் அடிப்படையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சராசரியான பேட்ஸ்மேனாகவே கருதப்படுகிறார். இந்நிலையில் பேட்டிங் சராசரி குறைந்திருந்தாலும் விராட் கோலி ஆல் டைம் கிரேட் டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இருப்பார் என்று ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சிறந்தவர் தான்:

“ஆல் டைம் கிரேட் பேட்ஸ்மேன்களின் பட்டியலைப் பொறுத்த வரை விராட் கோலி அங்கேயே இருக்க வேண்டும். சிறந்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் இருக்க வேண்டும். நீங்கள் அவரை ஆல் டைம் கிரேட் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடுவதாக வைத்துக்கொள்வோம். அவருடைய பேட்டிங் சராசரி கடந்த சில வருடங்களில் குறைந்தது. இருப்பினும் தம்முடைய கேரியரின் பெரும்பாலான நேரங்களில் அவர் 50க்கும் மேற்பட்ட சராசரியைக் கொண்டிருந்தார்”

இதையும் படிங்க: ஐ.பி.எல் கப்பை ஆர்.சி.பி ஜெயிச்சிட்டா தினேஷ் கார்த்திக் தொல்லையை தாங்க முடியாது – ஜாலியாக பேசிய நாசர் ஹுசேன்

“ஆனால் அவருடைய சராசரி கடந்த 3 – 4 வருடங்களில் 46, 47 என குறைந்து போனது. அவர் 30 சதங்கள் அடித்துள்ளார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். மேலும் விராட் கோலி மட்டுமின்றி அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் தடுமாறுவது வாடிக்கை என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். அத்துடன் பேட்டிங்கை தாண்டி ஃபிட்னஸ், கேப்டன்ஷிப், பிராண்ட், அணுகுமுறை போன்ற விஷயங்களுக்காக விராட் கோலி எப்போதும் நினைவு கொள்ளப்படுவார் என்று பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -