ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது குவாலிபயர் போட்டியில் விளையாடிய ஆர்சிபி அணி அவர்களை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.
ஆர்.சி.பி ஜெயிச்சா தினேஷ் கார்த்திக் தொல்லை தாங்காது : நாசர் ஹுசேன்
ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் அந்த இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி எந்த அணி வந்தாலும் அவர்களை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்களும் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்ற வேளையில் இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.
இந்நிலையில் எதிர்வரும் இந்த 2025 ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றி விட்டால் அந்த அணியின் ஆலோசகராக தற்போது இருக்கும் தினேஷ் கார்த்திக்கின் தொல்லை தாங்க முடியாது என பிரபல வர்ணனையாளர்களான நாசர் உசேன் மற்றும் மைக்கேல் ஆதர்டன் ஆகியோர் ஜாலியாக பேசியுள்ளனர்.
ஏனெனில் ஏற்கனவே தினேஷ் கார்த்திக் சர்வதேச போட்டிகளின் போது வர்ணனையாளராக பணியாற்றிய போது அவர்கள் இருவரிடம் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளார். அவர்களுக்குள் சுவாரஸ்யமான மற்றும் ஜாலியான உரையாடல்கள் நடக்கும். அந்த வகையில் உள்ள நட்பின் அடிப்படையில் தற்போது நாசர் உசேன் கூறியதாவது : பெங்களூரு அணி தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
இதையும் படிங்க : ஈ சாலா கப் நம்தே சொல்லாதீங்கன்னு கோலி சொல்லிட்டாரு.. ஆர்சிபி அணியின் கனவு பற்றி ஏபிடி உருக்கம்
ஒருவேளை இறுதிப்போட்டியிலும் அந்த அணி வெற்றி பெற்றுவிட்டால் தினேஷ் கார்த்திக்கின் தொல்லையை எங்களால் தாங்க முடியாது. ஏற்கனவே அவர் எங்களிடம் கலகலவென்று பெங்களூரு அணியை விட்டுக் கொடுக்காமல் பேசுவார். தற்போது ஆலோசகராக இருக்கும் அவரது அணி வெற்றி பெற்றுவிட்டால் நிச்சயம் அந்த மகிழ்ச்சியில் இரட்டிப்பாக எங்களை தொல்லை செய்வார் என நாசர் உசேன் கூறியது குறிப்பிடத்தக்கது.



