ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இந்த வருடம் ரஜத் படிதார் தலைமையில் ஆரம்பம் முதலே அசத்திய அந்த அணி வெளியூரில் விளையாடிய 7 போட்டிகளையும் வென்று வரலாறு காணாத சாதனை படைத்தது. அப்படியே புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்த பெங்களூரு அணி குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதி பெற்றது.
அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்பை முதலில் பவுலிங் செய்த பெங்களூரு 101 ரன்களுக்கு சுருட்டி வீசியது. பின்னர் சேசிங் செய்த பெங்களூரு அணி 10 ஓவரில் 106/2 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அதனால் ஜூன் மூன்றாம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாட பெங்களூரு தகுதி பெற்றுள்ளது.
ஈ சாலா கப் சொல்லாதீங்க:
2009, 2011, 2016குப்பின் 9 வருடங்கள் கழித்து செய்யும் முறை ஆர்சிபி ஃபைனலில் விளையாட உள்ளது. அதனால் இம்முறை கண்டிப்பாக முதல் கோப்பையை பெங்களூரு அணி வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதன் காரணமாக ஈ சாலா கப் நம்தே என்ற தங்களுடைய முழக்கத்தை ஆர்சிபி சமூக வலைதளங்களில் ஒலிக்கத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஈ சாலா கப் என்ற வார்த்தைகளை எங்கேயும் சொல்லக்கூடாது என்று விராட் கோலி தம்மிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் கடந்த காலங்களில் அந்த வசனத்தைச் சொல்லி கடைசியில் ஆர்சிபி தோல்வியை சந்தித்ததாக அவர் மறைமுகமாக கூறியுள்ளார். இருப்பினும் இம்முறை ஆர்சிபி அணியின் நீண்ட நாள் கனவான முதல் கோப்பை நிஜமாகப் போவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
ஏபிடி நெகிழ்ச்சி:
இது பற்றி ஏபி டீ வில்லியர்ஸ் அவர் பேசியது பின்வருமாறு. “ஆர்சிபி கோப்பையை வெல்வதற்கான நேரம் வந்து விட்டது. நான் அதை (ஈ சாலா கப்) விராட் கோலியின் காரணமாக பெங்களூருவின் மொழியில் சொல்ல முடியாது. இனிமேலும் அதை நீங்கள் சொல்வதற்கு அனுமதியில்லை என்று விராட் கோலி என்னிடம் சொல்லி விட்டார்”
இதையும் படிங்க: தல தோனியுடன் ஒவ்வொரு நொடியும் மாஸ்டர்க்ளாஸ்.. இந்த பரிசை ஃபிரேம் பண்ணி வைப்பேன்.. உர்வில் நெகிழ்ச்சி
“ஆனால் உண்மையாக இந்த வருடம் அனைத்தும் நம்முடைய வழியில் செல்கிறது என்று நான் நம்புகிறேன். எனவே கொக்கிகளைப் போட்டுக் கொள்ளுங்கள். இந்தப் பயணத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்” என்று தெரிவித்தார். மொத்தத்தில் இந்த வருடம் ஆர்சிபி கோப்பையை வென்றால் 18 வருட வெறித்தனத்தையும் சேர்த்து மொத்தமாக கொண்டாடுவதற்கு பெங்களூரு ரசிகர்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.



