- Advertisement -
உலக கிரிக்கெட்

இம்முறை ஆஷஸ் கோப்பையை வென்று அதிக ரன்ஸ், விக்கெட்ஸ் எடுக்கப்போவது இவங்க தான்.. பாண்டிங் கணிப்பு

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 2025 – 26 சீசன் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் நவம்பர் 23ஆம் தேதி துவங்குகிறது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் அத்தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார்? என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் 2010/11 ஆஷஸ் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனைப் படைத்தது.

அதன் பின் ஆஸ்திரேலியாவில் வெறும் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வெல்ல முடியாமல் திணறி வரும் இங்கிலாந்து 13 தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது. எனவே இம்முறையும் ஆஸ்திரேலியா தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வெல்லும் என்பது அந்நாட்டவர்களின் கருத்தாக இருக்கிறது. மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பஸ்பால் என்ற பெயரில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.

- Advertisement -

கோப்பை யாருக்கு:

எனவே இம்முறை பஸ்பால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்பது ஆங்கிலேய ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் 2025/26 ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்லும் என்று அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். மேலும் ஹேசல்வுட் காயமடைந்துள்ளதால் ஸ்டார்க் அதிக விக்கெட்டுகளையும், பட் கமின்ஸ்க்கு பதிலாக கேப்டனாக ஆஸ்திரேலியாவைத் தலைமைத் தாங்கும் ஸ்டீவ் ஸ்மித் அதிக ரன்கள் குவிப்பார் என்றும் பாண்டிங் கணித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இம்முறை இங்கிலாந்து விளையாடும் விதத்தை வைத்து ஆஷஸ் தொடரில் எந்தப் போட்டியும் டிராவில் முடியும் என்று நான் நினைக்கவில்லை. அனைத்து போட்டிகளும் மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே 3 – 2 (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும் என்று நான் கணிக்கிறேன். இந்த நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து வெறும் 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது”

- Advertisement -

பாண்டிங் கணிப்பு’

“ஆனால் இம்முறை அவர்கள் 2 வெற்றிகளைப் பெறுவார்கள் என்று கணிக்கிறேன். அந்தளவுக்கு இத்தொடர் மிகவும் நெருக்கமாக இருக்கும். உண்மையில் இத்தொடரில் ஹேசல்வுட் அதிக விக்கெட்டுகளை எடுப்பார்கள் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். எனவே தற்போது அவரை எடுத்து விட்டு மிட்சேல் ஸ்டார்க்கை அதிக விக்கெட்டுகள் எடுக்கக்கூடிய வீரராக நான் முன்னிட்டுச் செல்கிறேன்”

இதையும் படிங்க: எதுக்கு டைம் வேஸ்ட் பண்றிங்க கம்பீர்? இந்த சோதனையால் இப்படி மாத்துனா என்ன பயன்? ஆகாஷ் சோப்ரா

“அதே போல இம்முறை ஸ்டீவ் ஸ்மித் அதிக ரன்கள் குவிக்கும் வீரராக வருவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் சீரமைந்து வருகிறது. மீண்டும் 4வது இடத்தில் விளையாடும் அவர் கடந்த சில போட்டிகளில் சதங்கள் அடித்துள்ளார். இங்கிருந்து நியூயார்க் சென்று நீண்ட இடைவெளி எடுத்து புத்துணர்ச்சியாக திரும்பிய அவர் ஷீல்ட் உள்ளூர் தொடர் போட்டியில் சதத்தை அடித்து கம்பேக் கொடுத்துள்ளார்” என்று கூறினார்.

- Advertisement -