டி20 உலகக்கோப்பை : இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – ரிக்கி பாண்டிங் கணிப்பு

Ponting
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கிய எட்டாவது டி20 உலக கோப்பை தொடரானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. சூப்பர் 12 சுற்றின் முடிவினை நோக்கி தற்போது இந்த தொடரானது பயணித்து வரும் வேளையில் இதுவரை எந்த ஒரு அணியும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யவில்லை. அந்த வகையில் இந்த தொடரானது மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையறுதி போட்டிக்கு தகுதி பெரும் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் இதுவரை போட்டி கடினமாக சென்று வருகிறது.

ICC T20 World Cup

- Advertisement -

மேலும் இந்த தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடப்போகும் அணிகள் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் மெல்போர்ன் மைதானத்தில் அக்டோபர் 13-ஆம் தேதி அந்த இறுதிப் போட்டியில் மோதப்போகும் இரண்டு அணிகள் எது என்பது குறித்த தனது கருத்தினை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தான் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கும் அந்த இறுதிப் போட்டியில் மோதும் என்று நினைக்கிறேன். அதே போன்று இந்த தொடர் முழுவதுமே தென்னாப்பிரிக்கா அணி அபாயகரமான அணியாக திகழ்ந்து வருகின்றனர் என்று ரிக்கி பாண்டிங் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் மெல்போர்ன் மைதானத்தில் அந்த இறுதிப் போட்டியில் யார் விளையாடுவார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

INDvsAUS

ஆனால் என்னை பொருத்தவரை ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்று நினைக்கிறேன் என்று பாண்டிங் கூறியுள்ளார். குரூப் இரண்டில் இடம் பிடித்துள்ள இந்திய அணியானது இந்த சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான், நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் தற்போது அரையிறுதியில் ஒரு காலை வைத்துவிட்டது என்றே கூறலாம்.

- Advertisement -

இன்னும் இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டுமே விளையாட இருப்பதினால் நிச்சயம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விடும். அதே வேளையில் ஆஸ்திரேலிய அணியானது முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : அணியிலிருந்து வெளியேற்றிய பின்னரும் நான் அதை மட்டும் விடவே இல்ல – கம்பேக் குறித்து முகமது ஷமி வெளிப்படை

பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முக்கியமான போட்டி மழை காரணமாக தடை பட்டதால் இரு அணிகளுக்குமே புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அயர்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது. இப்படி 5 புள்ளிகளை பெற்ற ஆஸ்திரேலிய அணியானது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் வேளையில் ஆஸ்திரேலியா அணி கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement