அணியிலிருந்து வெளியேற்றிய பின்னரும் நான் அதை மட்டும் விடவே இல்ல – கம்பேக் குறித்து முகமது ஷமி வெளிப்படை

Mohammad-Shami
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 60 டெஸ்ட் போட்டிகள், 82 ஒருநாள் போட்டிகள் மற்றும் 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த ஓராண்டாகவே எந்த ஒரு சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத அவர் நேரடியாக இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகவே முகமது ஷமிக்கு நேரடியாக அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

Mohammad Shami 1

- Advertisement -

கடந்த ஓர் ஆண்டாக விளையாடாத அவர் நேரடியாக எவ்வாறு இந்த உலகக் கோப்பை தொடரில் பந்துவீசப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் ஆஸ்திரேலியா மைதானங்களில் தற்போது முகமது ஷமி மிகச்சிறப்பாக பந்து வீசி வருகிறார். மேலும் ஏற்கனவே ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் பந்துவீசியுள்ள அவர் அந்த அனுபவத்தை வைத்து இந்த தொடரில் அசத்தலான பவுலிங்கையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளிலும் சேர்த்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் மிகவும் எக்கனாமிக்கலாக பந்துவீசி அசத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஓராண்டாக டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் சிறப்பாக பந்து வீசுவது குறித்தும், இந்திய அணியில் தனது கம்பேக் குறித்தும் பேசியுள்ள முகமது ஷமி தற்போது மனம்திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : என்னை இந்திய அணி டீமிலிருந்து வெளியேற்றி இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரும் எனவே எப்போதுமே தயாராக இருங்கள் என்று நிர்வாகம் என்னிடம் சொல்லியிருந்தது.

அதனால் என்னை எப்போது அழைத்தாலும் தயாராக இருக்க வேண்டும் என்று கடந்த ஓராண்டாகவே பயிற்சியை மட்டும் விடாமல் தொடர்ந்து செய்து வந்தேன். ஐ.பி.எல் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசிய நான் அதன் பின்னரும் தொடர்ச்சியான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன். எந்த ஒரு வடிவத்தில் நான் பந்து வீச வந்தாலும் அணிக்காக என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதில் மட்டுமே நினைப்பாய் இருந்தேன். அந்த வகையில் மீண்டும் இந்திய அணிக்கு என்னுடைய பங்களிப்பை வழங்கி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

புதிய பந்து பழைய பந்து என இரண்டிலுமே நான் சிறப்பாக பந்து வீச காரணமே என்னுடைய அனுபவம் தான். போட்டிகளின் போது நான் புதிய பந்தில் அதிகளவு பந்து வீசினாலும் பயிற்சியின்போது நிறைய பழைய பந்துகளை வைத்து தான் பயிற்சியை செய்வேன். அதனால் டெத் ஓவர்களிலும் தற்போது பந்து வீசுவது எனக்கு சற்று சாதகமாக இருக்கிறது என முகமது ஷமி கூறினார்.

இதையும் படிங்க : அம்பயரை கைக்குள்ள போட்டுக்கிட்டு கோலி போடும் ஆட்டத்துக்கு முடிவில்லையா – 2 முன்னாள் பாக் வீரர்கள் காட்டம்

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் ரன்களை விட்டுக் கொடுத்த அவர் மீது ஏகப்பட்ட விமர்சனம் இருந்த வேளையில் கடந்த ஆண்டு அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் தற்போது இந்த டி20 உலக கோப்பை தொடரில் அசத்தலாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement