பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் எதிர்வரும் மார்ச் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை ஐசிசி-யின் ஏழாவது சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு செல்லும் அணிகள் :
மேலும் இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் இம்முறை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரண்டு அணிகள் குறித்த தனது கருத்தினை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இம்முறை இறுதிப்போட்டியில் தகுதிபெறும் அணிகளாக நான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளைத் தான் பார்க்கிறேன். ஏனெனில் தற்போது உள்ள 8 அணிகளில் இந்த இரண்டு அணிகள் தான் பலமான திகழ்கின்றன. அவர்களை தவிர்த்து அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளாக இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் : இம்முறை பாகிஸ்தான் அணிக்கும் அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏனெனில் சொந்த மண்ணில் விளையாடும் அவர்கள் பலமான அணியாக திகழ்வார்கள். அதுமட்டுமின்றி சொந்த மண்ணில் ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளை வீழ்த்தியுள்ளன.
இதையும் படிங்க : ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வாலுக்கு அடுத்து 3 ஆவது வீரராக சஞ்சு சாம்சன் நிகழ்த்தியுள்ள சாதனை – விவரம் இதோ
இதன் காரணமாக அவர்களுக்கும் அரையிறுதிக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதியிருந்த வேளையில் அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.