மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் 7 பந்துகளை சந்தித்து 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 16 ரன்களை எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்திருந்தார்.
சஞ்சு சாம்சன் நிகழ்த்திய சாதனை :
ஆனாலும் அவரது இந்த இன்னிங்ஸ் மூலம் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரது சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். அது குறித்து விவரம் தற்போது வெளியாகி அனைவரும் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்த போட்டியின் போது சஞ்சு சாம்சன் இந்த போட்டியின் முதல் ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சரின் முதல் பந்திலேயே சஞ்சு சாம்சன் சிக்ஸர் விளாசி அசத்தியிருந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் போட்டியின் முதல் பந்தை சிக்ஸ் அடித்த மூன்றாவது இந்திய வீரன் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் ஆதில் ரஷித்தை ரோகித் சர்மா முதல் பந்தில் சிக்ஸர் அடித்திருந்தார். அதற்கு அடுத்து கடந்த ஆண்டு ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய ஜேய்ஸ்வால் சிக்ஸ் அடித்தார்.
இப்படி இவர்கள் இருவருமே சர்வதேச டி20 கிரிக்கெட்டின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்திருந்த வேளையில் தற்போது மூன்றாவது வீரராக சாம்சன் இந்த சாதனையை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியா எந்த தவறும் செய்யல.. பீட்டர்சன் வாயை முதல் பந்திலேயே துபே மூடிட்டாரு.. உத்தப்பா பேட்டி
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒட்டுமொத்தமாகவே சேர்த்து 51 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை அளித்திருந்த அவர் இந்த ஒரு சாதனையை மட்டுமே இந்த தொடரில் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.