IPL 2023 : எவ்ளோ தான் தோக்குறது, 13 மேட்ச் சான்ஸ் கொடுத்ததும் அடிக்கல அதான் கழற்றி விட்டோம் – இளம் வீரரை விளாசிய பாண்டிங்

Ponting
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பை வெல்வதற்காக களமிறங்கியுள்ள 10 அணிகளில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் டெல்லி கேபிட்டல்ஸ் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடி வருகிறது. குறிப்பாக ரிஷப் பண்ட் இல்லாத நிலைமையில் டேவிட் வார்னர் தலைமையில் 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து முதல் 5 போட்டிகளில் 5 தொடர் தோல்விகளை சந்தித்த அந்த அணி பெரிய பின்னடைவை சந்தித்தாலும் கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் தகுதி பெற போராடி வருகிறது.

- Advertisement -

அந்த அணிக்கு பவுலர்கள் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட போதிலும் பேட்டிங் துறையில் டேவிட் வார்னர், அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து மிட்சேல் மார்ஷ் போன்ற வீரர்கள் சுமாராக செயல்படுவது பெரிய பின்னடைவாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் இந்திய வீரர் பிரித்வி ஷா 12 (9), 7 (5), 0 (3), 15 (10), 0 (2), 13 (11) என சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏற்படுத்திய அழுத்தத்தால் மறுபுறம் மெதுவாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட டேவிட் வார்னர் பெரிய ரன்களை குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து சேவாக் போன்ற முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை வாங்கி கட்டிக் கொண்டார்.

பாண்டிங் கோபம்:
2018 அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று கொடுத்து சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு அசத்திய பிரித்வி ஷா நாளடைவில் அதை தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு இல்லாமல் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார். அதிலிருந்து உள்ளூர் கிரிக்கெட்டில் கடுமையாக போராடி கடந்த பிப்ரவரி மாதம் இந்திய அணியில் தேர்வானாலும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாத அவர் மீண்டும் நிலையான இடத்தைப் பிடிப்பதற்காக அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த சீசனில் மோசமாக செயல்பட்டு வருகிறார்.

இத்தனைக்கும் முதல் இன்னிங்சில் ஃபீல்டிங் செய்யாமல் இம்பேக்ட் வீரராக புத்துணர்ச்சியுடன் களமிறங்கியும் ரன் அவுட்டான அவர் பெரிய பெயரை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் அடிக்காமல் காலத்தை தள்ளுவீர்கள் என்று மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை சந்தித்ததால் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டார். அந்த போட்டியில் அவருக்கு பதில் வாய்ப்பு பெற்ற பில் சால்ட் சுமாராக செயல்பட்டாலும் டெல்லி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.

- Advertisement -

அந்த நிலையில் பில் சால்ட் சுமாராகவே செயல்பட்டு வருவதால் பிரிதிவி ஷா மீண்டும் அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு 13 போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தும் ஒரு அரை சதம் கூட அடிக்காத காரணத்தாலேயே பிரிதிவி ஷா கழற்றி விடப்பட்டதாக பயிற்சியார் ரிக்கி பாண்டிங் பதிலளித்தது பின்வருமாறு.

Ponting

“டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக பிரிதிவி ஷா கடைசியாக 50 ரன்கள் அடித்து 13 போட்டிகள் (2022 சீசன் சேர்த்து) முடிந்து விட்டது என்று நினைக்கிறேன். மேலும் இதர அணிகளில் டாப் ஆர்டரில் அவரை விட மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இருக்கிறார்கள். பிரிதிவி மிகச் சிறப்பான வீரர் மற்றும் மேட்ச் வின்னர் என்பது எங்களுக்கு தெரியும். அதனாலேயே நாங்கள் அவரை மீண்டும் தக்க வைத்தோம்”

இதையும் படிங்க:நடிச்சா ஹீரோ தான், இங்கிலாந்தினர் வியக்கும் அளவுக்கு – அசத்தும் புஜாரா, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தயார்

“குறிப்பாக அவர் குறிப்பிட்ட பந்துகளை எதிர்கொண்டு விளையாடும் 95% போட்டிகளில் நாங்கள் வெற்றிகளை பெற்றுள்ளோம். ஆனால் இந்த சீசனில் இதுவரை அவர் எதையும் வெளிப்படுத்தவில்லை. மேலும் நாங்கள் விளையாடிய முதல் 6 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே எடுத்தோம். தற்சமயத்தில் அது போன்ற ஒரு துவக்கம் எங்களுக்கு தேவையில்லை. எனவே அவரை கழற்றி விடுவது கடினமான முடிவு என்றாலும் அடுத்து வரும் போட்டிகளில் எங்களது அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement