நடிச்சா ஹீரோ தான், இங்கிலாந்தினர் வியக்கும் அளவுக்கு – அசத்தும் புஜாரா, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தயார்

Pujara County
- Advertisement -

இங்கிலாந்தின் பிரபல கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் நட்சத்திர இந்திய அனுபவ கிரிக்கெட் வீரர் செட்டேஸ்வர் புஜாரா சசக்ஸ் அணியின் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக கடந்த 10 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமையின் சிகரமாக நங்கூரமாக நின்று விளையாடி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்ததால் கடந்த வருடம் கழற்றி விடப்பட்டார். அப்போது சசக்ஸ் அணிக்காக சதங்களையும் இரட்டை சதங்களையும் அடித்து அபாரமாக செயல்பட்ட அவர் இழந்த ஃபார்மை மீட்டெடுத்து தற்போது இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்துள்ளார்.

அந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் எந்த அணிக்காகவும் வாங்கப்படாத அவர் கவுண்டி தொடரில் கேப்டனாக விளையாடி வருகிறார். அந்த வரிசையில் ஏப்ரல் 27ஆம் தேதி க்ளூசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக துவங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சசக்ஸ் அணிக்கு அலி ஓர் 36, டாம் ஹெய்ன்ஸ் 3 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அந்த நிலைமையில் களமிறங்கிய புஜாரா தமக்கே உரித்தான பாணியில் நங்கூரமாக பேட்டிங் செய்து சரிவை சரி செய்து தனது அணியை தூக்கி நிறுத்தினார்.

- Advertisement -

ஹீரோ தான்:
அவருடன் 3வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய டாம் அஸ்லோப் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஜேம்ஸ் கோல்ஸ் தனது பங்கிற்கு புஜாராவுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 11 பவுண்டரியுடன் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கி ஓலிவ் கார்ட்டருடன் ஜோடி சேர்ந்த புஜாரா மீண்டும் நங்கூரமாக நின்று 5வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை 400 ரன்கள் தாண்ட வைத்து சதமடித்து 1 வழியாக 20 பவுண்டரி 2 சிக்ஸருடன் 151 (238) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவருடன் சிறப்பாக செயல்பட்ட கார்ட்டர் 59* (78) ரன்களும் ஹஸ்டன்-பிரேண்டிஸ் 29* (19) ரன்களும் எடுத்ததால் 455/5 ரன்கள் குவித்து சக்ஸஸ் தங்களுடைய முதல் இன்னிங்ஸ் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. க்ளூசெஸ்டர்ஷைர் சார்பில் அதிகபட்சமாக டீ லங்கே மற்றும் கோகர் ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய க்ளூசெஸ்டர்ஷைர் அணி சசக்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் 3வது நாள் முடிவில் 168/6 என தடுமாறி வருகிறது.

- Advertisement -

மார்கஸ் ஹரீஸ் 37, கிறிஸ் டென்ட் 32, ஜேம்ஸ் பிராசி 22 என அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் களத்தில் மில்ஸ் ஹமோண்ட் 35* ரன்களிலும் டாம் பிரிஸ் 18* ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். அப்படி சசக்ஸ் அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் புஜாரா இதுவரை 18 இன்னிங்ஸில் 1426 ரன்களை 95.06 என்று அபாரமான சராசரியில் குவித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 7 சதங்களை அடித்துள்ள அவர் 231 ரன்களை அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்துள்ளார்.

இதில் வியக்கத் தகுந்த விஷயம் என்னவெனில் சசக்ஸ் அணிக்காக இதுவரை விளையாடிய போட்டிகளில் 50 ரன்களை கடந்த எந்த போட்டியிலும் புஜாரா சதமடிக்காமல் இருந்ததில்லை. அதாவது இதுவரை அவர் 50 ரன்களை கடந்த 7 இன்னி்ஸ்களிலும் முறையே 201*, 109, 203, 170*, 231, 115, 151 என 7 சதங்களை அடித்துள்ளார். அதாவது சசக்ஸ் அணிக்காக அடித்த அனைத்து அரை சதங்களையும் புஜாரா சதமாக மாற்றியுள்ளார். இதே காலகட்டத்தில் அந்த அணிக்காக விளையாடும் உள்ளூர் இங்கிலாந்து வீரர்கள் கூட இவ்வளவு சிறப்பாக செயல்பட்டதில்லை.

இதையும் படிங்க:GT vs KKR : இனிமே தான் அவரோட வெறித்தனமான ஆட்டத்தை பாக்கப்போறீங்க. தமிழக வீரரை பாராட்டிய – ஹார்டிக் பாண்டியா

அந்த வகையில் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பது போல் அடித்தால் சதமாக தான் அடிப்பேன் என்ற வகையில் சசக்ஸ் அணிக்காக புஜாரா செயல்பட்டு வருவது நிறைய இங்கிலாந்தினரை வியப்பில் ஆழ்த்தி பாராட்ட வைக்கிறது. அதை விட இவை அனைத்தையும் வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தயாராகும் வகையில் புஜாரா அடித்து வருவது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement