GT vs KKR : இனிமே தான் அவரோட வெறித்தனமான ஆட்டத்தை பாக்கப்போறீங்க. தமிழக வீரரை பாராட்டிய – ஹார்டிக் பாண்டியா

Sai-Sudharsan-and-Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியானது நேற்று மதியம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

GT vs KKR

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது. பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தமிழக வீரர் விஜய் சங்கர் 24 பந்துகளை சந்தித்து இரண்டு பவுண்டரி மற்றும் 5 சிக்சர் என 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் குஜராத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இப்படி விஜய் சங்கரின் ஆட்டம் அற்புதமாக இருந்ததை தொடர்ந்து நேற்று அவருக்கு அனைவரது மத்தியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன.

Vijay Shankar

அதே வேளையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் விஜய் சங்கரின் இந்த பிரமாதமான ஆட்டம் குறித்த தனது பாராட்டுகளை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் வெற்றி தோல்வி குறித்து யோசிக்கவில்லை. விஜய் சங்கர் விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

அவர் ஒரு உண்மையான போராளி என்பது இந்த ஆட்டத்தின் மூலம் தெரிந்துள்ளது. முன்பை விட தற்போது நல்ல நம்பிக்கையுடனும், நல்ல பேட்டிங் ஆர்வத்துடன் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த முறை அவரது கடின உழைப்பிற்கான பலன் வெளிப்பட்டு வருகிறது. இனியும் அவர் இந்த சீசனில் நிச்சயம் இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

இதையும் படிங்க : வீடியோ : யோவ் பேசிகிட்டு இருக்கும் போதே எங்க அடிக்கிற – நெஹ்ராவின் சேட்டையால் களத்தில் தவித்த முரளி கார்த்திக்

அதுமட்டும் இன்றி இந்த தொடரில் இனிவரும் போட்டிகளிலும் இதற்கு மேலேயும் அவரிடம் இருந்து நீங்கள் சிறப்பான செயல்பாட்டை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். எப்பொழுதுமே என் வாழ்க்கையில் நான் ஒரு விடயத்தை நம்புவதுண்டு. அந்த வகையில் நல்ல வீரர்கள் நல்ல இடத்திற்கு செல்வார்கள். அந்த வகையில் விஜய் சங்கர் நல்ல முன்னேற்றத்தை காண்பார் என ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement