- Advertisement -

இது டி20 இல்ல.. கஷ்டமான டெஸ்டில் சுப்மன் கில் முதல்ல அதுல உழைச்சு முன்னேறனும்.. பாண்டிங் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாட உள்ளது. சமீபத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் சவாலான இங்கிலாந்து மண்ணில் இளம் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக சுப்மன் கில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சிறப்பாக பேட்டிங் செய்ததில்லை. அதனால் முதலில் அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்தனர். அப்படிப்பட்ட அவர் புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஒரு தரப்பினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்.

- Advertisement -

கஷ்டமான கேப்டன்ஷிப்:

இந்நிலையில் சுப்மன் கில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக செயல்படத் தகுதியானவர் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அதே சமயம் ஐபிஎல் தொடரை போல டெஸ்ட் கேப்டன்ஷிப் எளிதாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சுப்மன் கில் முதலில் தம்முடைய டெஸ்ட் பேட்டிங்கில் கடினமாக உழைத்து முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி பாண்டிங் பேசியது பின்வருமாறு. “அவருடைய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் ஃபார்ம் நன்றாக இருக்கிறது. ஆனால் தன்னுடைய டெஸ்ட் பேட்டியில் அவர் கொஞ்சம் உழைத்து வேலை செய்ய வேண்டும். நீங்கள் புதிய கேப்டனாக இருக்கும் போது அதை செய்வது சுலபமாக இருக்காது. கேப்டனாக செயல்படும் போது முதலில் நீங்கள் உங்களுடைய பேட்டிங் பற்றி கவலைப்பட வேண்டும்”

- Advertisement -

பாண்டிங் அட்வைஸ்:

“எனவே இந்தப் பொறுப்பு அவருக்கு எளிதாக இருக்காது. சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்து இந்தியா சரியான முதலீடு செய்துள்ளது. கடந்த கோடைகாலத்தில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா விளையாடாத போது அவரை நான் என்னுடைய கேப்டனாக தெரிவு செய்திருந்தேன். அந்த சமயத்தில் பும்ராவும் லேசான காயத்துடன் இருந்ததாக செய்திகள் வந்தன. அப்போட்டியில் தான் பும்ரா காயத்தையும் சந்தித்தார்”

இதையும் படிங்க: அடுத்த ஆண்டு என்னோட டார்கெட் இதுதான்.. அதுக்காக பிராக்டீஸ் செய்யப்போறேன் – வைபவ் சூர்யவன்ஷி பேட்டி

“சுப்மன் கில் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அவரிடம் ஐபிஎல் தொடரின் போது 8 – 10 முறை பேட்டிங், கேப்டன்ஷிப் போன்றவைகள் பற்றி பேசியிருப்பேன். குஜராத் அணியுடன் அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே எக்ஸ்ட்ரா பொறுப்பு அவரை மங்கச் செய்யும் என்பது போல் தெரியவில்லை. அவர் இந்த வேலையில் பொறுப்புடன் செயல்படுவார் என்று தெரிகிறது. இங்கிருந்து அவர் இந்திய அணியுடன் 10 வருடங்கள் இருக்கப் போகிறார்” என்று கூறினார்.

- Advertisement -