155 கி.மீ மயங் யாதவை சமாளிக்க.. ஸ்ரேயாஸ் எடுத்த மாஸ்டர் முடிவு எனக்கே ஆச்சர்யமா இருக்கு.. பாண்டிங் பாராட்டு

Ricky Ponting
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி தரம்சாலாவில் 54வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 237 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 91, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45, சசாங் சிங் 33*, ஜோஸ் இங்லிஷ் 30 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய லக்னோ 20 ஓவரில் 199/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக ஆயுஷ் படோனி 74, அப்துல் சமத் 45 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதையும் சேர்த்து 7வது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. மறுபுறம் 6வது தோல்வியை சந்தித்த லக்னோ பிளே ஆஃப் செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

மாஸ்டர் முடிவு:

முன்னதாக இந்த வருடம் பஞ்சாப் அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் பெரும்பாலும் 3வது இடத்தில் விளையாடி வருகிறார். ஆனால் இந்தப் போட்டியில் 4வது இடத்தில் களமிறங்கிய அவர் ஜோஸ் இங்லீஷை 3வது இடத்தில் விளையாட வைத்தார். அதில் இங்லீஷ் அதிரடியாக 30 (14) ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். எனவே அந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் முதல் ஓவரிலேயே பிரியான்ஸ் ஆர்யா அவுட்டானதும் ஜோஸ் இங்லீஷை 3வதாக களமிறக்கும் முடிவை ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்ததாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். குறிப்பாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசக்கூடிய லக்னோவின் மயங் யாதவை தம்மை விட இங்லீஷ் சிறப்பாக எதிர்கொள்வார் என்று ஸ்ரேயாஸ் கருதியதாலேயே அந்த மாஸ்டர் முடிவை எடுத்ததாக பாண்டிங் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:

அந்த முடிவால் மயங் யாதவுக்கு எதிராக இங்லிஷ் 3வது ஓவரில் 22 ரன்கள் வெளுத்து வாங்கியது பற்றி பாண்டிங் பேசியது பின்வருமாறு. “அந்த முடிவை கேப்டன் எங்களிடம் எடுத்து வந்தார். இந்த பிட்ச்சில் ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தால் லக்னோ பௌலிங் அட்டாக்கை சமாளிக்க இங்லீஷை அனுப்புவது சரியாக இருக்கும் என்று அவர் கருதினார்”

இதையும் படிங்க: டெஸ்ட் கேப்டன்சி மட்டும்மில்ல துணை கேப்டன் பதவி கூட பும்ராவிற்கு கிடையாது – பி.சி.சி.ஐ எடுத்துள்ள புதிய முடிவு

“குறிப்பாக மயங் ஆரம்பத்திலேயே பவுலிங் செய்வார் என்று நாங்கள் கருதினோம். அவரது பந்துகள் பெரும்பாலும் ஷார்ட்டாக இருக்கும். அது போன்ற பந்துகளை எதிர்கொள்வதே இங்லீஷின் பலமாகும். அவர் அடித்த ஃபுல் ஷாட்டுகள் அபாரமாக இருந்தது” என்று கூறினார். மேலும் அந்த முடிவு தங்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட உதவியதாகவும் பாண்டிங் தெரிவித்தார். அந்த முடிவு லக்னோவுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்து பஞ்சாப் வெற்றிக்கான துவக்கத்தைக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement