கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் சில வாரங்களில் நிறைவடைய உள்ளது. அதற்கடுத்து இந்திய அணியானது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20ஆம் தேதி முதல் துவங்கவுள்ள இந்த தொடருக்கான இந்திய அணி இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்ற தகவல்களும் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
கேப்டன்சி ஆசையே பும்ராவுக்கு வரக்கூடாது : பி.சி.சி.ஐ முடிவு
இந்த தொடருக்கான டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவே தொடர்வார் என்று தெரிகிறது. ஏனெனில் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதாக ஏற்கனவே உறுதி செய்துள்ள வேளையில் அவரை நீக்க முடியாத காரணத்தினால் அவரே தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.
அதேபோன்று துணை கேப்பனாக பும்ரா தான் செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ பும்ராவிற்கு பதில் ரிஷப் பண்ட் அல்லது சுப்மன் கில் ஆகிய இருவரில் ஒருவரை இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஏனெனில் ஏற்கனவே ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டியிலும் விளையாடிய பும்ரா அந்த தொடரின் ஐந்தாவது போட்டியின் போது அடைந்த காயம் காரணமாக முதல் இன்னிங்ஸ்சுடன் வெளியேறி அதன் பின்னர் பல மாதங்கள் ஓய்வில் இருந்து மீண்டும் தற்போது ஐபிஎல் தொடருக்கு தான் திரும்பி உள்ளார்.
இப்படி வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் அடிக்கடி காயத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதனால் அவரை முழுநேர டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பது இந்திய அணிக்கு பிரச்சனையை தரும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பேட்ஸ்மேன்களில் ஒருவரையே வருங்கால டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்க பிசிசிஐ யோசித்து வருவதால் இனி டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு மட்டுமல்ல துணை கேப்டன் பதவிக்கும் கூட பும்ராவின் பெயர் பரிசீலிக்கப்படாது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 2023-ல் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து மீண்டும் பாராட்ட வைத்த ரியான் பராக் – விவரம் இதோ
இதனால் ரோகித் சர்மா இன்னும் சில ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினால் கூட அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது சுப்மன் கில் போன்ற பேட்ஸ்மேன்களில் ஒருவரே அடுத்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.



