- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுதர்சன் கோல்டன் டக் அவுட்டாக கில் – கம்பீரே காரணம்.. சாய் கம்பேக் கொடுப்பாரு.. பாண்டிங் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணி மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. ஜூலை 23ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 387 ரன்கள் குவித்தது. ஆனால் அடுத்து விளையாடிய இங்கிலாந்து பஸ்பால் ஸ்டைலில் இந்தியாவை அடித்து நொறுக்கி 669 ரன்களை விளாசி 311 ரன்கள் முன்னிலை பெற்றது.

அடுத்ததாக விளையாடும் இந்திய அணிக்கு கிறிஸ் ஓக்ஸ் வேகத்தில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் கோல்டன் டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் 0/2 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்குமோ என்று ரசிகர்கள் கவலையில் இருந்தார்கள். அப்போது நங்கூரமாக விளையாடிய கேஎல் ராகுல் 87*, கேப்டன் கில் 78* ரன்கள் எடுத்துள்ளார்கள்.

- Advertisement -

கில் – கம்பீரே காரணம்:

அதனால் சரிவிலிருந்து மீண்ட இந்தியா தோல்வியைத் தவிர்க்க 5வது நாள் முழுவதும் நங்கூரமாக விளையாட உள்ளது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் அறிமுகமான சுதர்சன் டக் அவுட்டாகி 30 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் அடுத்தப் போட்டியிலேயே கருண் நாயருக்காக அவரை நீக்கிய இந்திய அணி நிர்வாகம் இப்போட்டியில் வாய்ப்பு கொடுத்தது.

அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய சுதர்சன் 61 ரன்கள் அடித்து டாப் ஸ்கோரைப் பதிவு செய்தார். அப்படிப்பட்ட நிலையில் 2வது இன்னிங்ஸில் அவர் டக் அவுட்டாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கேப்டன் கில் தான் காரணம் என்று ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். ஏனெனில் அறிமுகப் போட்டியுடன் நீக்கியதால் அடுத்தப் போட்டியில் விளையாடுவோமா? என்ற அச்சத்திலேயே சுதர்சன் டக் அவுட்டானதாக பாண்டிங் கூறியுள்ளார்.

- Advertisement -

பாண்டிங் விமர்சனம்:

மேலும் சுதர்சன் கம்பேக் கொடுத்து வரும் போட்டிகளில் அசத்துவார் என்று தெரிவிக்கும் பாண்டிங் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது உள்ளார்ந்த அழுத்தத்தை உருவாக்கும். அதாவது நமக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்குமா? என்ற அழுத்தத்தை நீங்கள் இளம் வீரரின் தோளில் சுமத்தக்கூடாது. அதனாலேயே முதல் போட்டியில் சாய் சுதர்சனை அவர்கள் அறிமுகமாக்கி பின்னர் கழற்றி விட்டு தற்போது மீண்டும் ஆதரவளிப்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது”

இதையும் படிங்க: கம்போஜ் 10 விக்கெட்ஸ் எடுப்பார்ன்னு நினைச்சீங்களா? கில் மாதிரி டைம் கொடுங்க.. கம்பீரை சாடிய கபில் தேவ்

“கேப்டன் மற்றும் பயிற்சியாளராக நீங்கள் ஒரு இளம் வீரருக்கு உறுதியான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். உன்னைத் தேர்ந்தெடுத்துள்ள நாங்கள் கணிசமான வாய்ப்பைக் கொடுத்து, எப்படி விளையாடப் போகிறீர்கள் என்பதைப் பார்ப்போம் என்று சொல்ல வேண்டும். சுதர்சன் போதுமானளவு சிறப்பாக செயல்படுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.

- Advertisement -