அவர் வந்தப்பவே எங்களின் தோல்வி கன்ஃபார்ம் ஆகிடுச்சு, அவர் தான் அதிக விக்கெட் எடுக்கப்போறாரு – ரிக்கி பாண்டிங் ஓப்பன்டாக்

- Advertisement -

ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2 உலகக் கோப்பைகளை வென்று கிரிக்கெட் கண்ட மகத்தான கேப்டன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். ஓய்வுக்குப்பின் பயிற்சியாளராகவும் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வரும் அவர் ஒவ்வொரு தொடருக்கு முன்பாக கணிக்கும் கணிப்புகள் சில தருணங்களில் அப்படியே நடந்தேறி வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் படுதோல்வியை சந்திப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பிப்ரவரி 9ஆம் தேதி துவங்கிய அப்போட்டியின் முதல் நாளிலேயே ஐசிசி இணையத்தில் தெரிவித்திருந்தார்.

Jadeja

- Advertisement -

குறிப்பாக ஆரம்பத்தில் விளையாடுவாரா என்று சந்தேகிக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டதும் ஆஸ்திரேலியாவை தூங்கவிடாமல் செய்யப் போகிறார் என்று ஐசிசி இணையத்தில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார். இறுதியில் அவர் கணித்தது போலவே இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வியை சந்தித்தது. முன்னதாக 2019 உலக கோப்பைக்கு பின் அபாரமாக செயல்பட்டு உலக அளவில் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஜொலித்து வரும் ரவீந்திர ஜடேஜா 2022 ஆசிய கோப்பையில் காயமடைந்து டி20 உலக கோப்பையிலும் பங்கேற்கவில்லை. அது அந்த 2 தொடர்களிலும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சரியான பாண்டிங் கணிப்பு:
அந்த நிலையில் காயத்துக்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஜடேஜா முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே குஜராத் தேர்தலில் தனது மனைவிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதனால் அதிருப்தியடைந்த பிசிசிஐ இந்த ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவதற்கு உங்களுடைய பிட்னஸ் மற்றும் பார்ம் ஆகியவற்றை நிரூபிக்க ரஞ்சிக் கோப்பையில் விளையாடி நிரூபிக்குமாறு நிபந்தனை விதித்தது. அதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற தமிழகத்திற்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் ஒரே இன்னிங்ஸ்சில் 7 விக்கெட்கள் எடுத்து தனது தரத்தை நிரூபித்த ரவீந்திர ஜடேஜா நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் நேரடியாக தேர்வாகி 70 ரன்கள் மற்றும் 7 விக்கெட்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அந்த வகையில் ரஞ்சிக் கோப்பை போட்டியில் அசத்தி கம்பேக் கொடுத்து நாக்பூரில் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்கியதை பார்த்ததுமே ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு தூங்காத இரவுகளை கொடுக்கப் போவதாக பிப்ரவரி 9ஆம் தேதி ஐசிசி இணையத்தில் ரிக்கி பாண்டிங் பேசியது பின்வருமாறு. “கடந்த வாரம் முதல் தர கிரிக்கெட்டில் அவர் அனேகமாக 11 (8) விக்கெட்டுகளை எடுத்து கம்பேக் கொடுத்ததை பார்த்தேன். அப்போதே அவர் ஆஸ்திரேலியர்களுக்கு தூங்காத இரவை கொடுக்கப் போகிறார் என்று தெரிந்து கொண்டேன்”

- Advertisement -

“ஏனெனில் இது போன்ற பிட்ச்களில் அவர் வீசும் வேகம் மற்றும் லைன் ஆகியன வலது கை பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கும். குறிப்பாக அனைத்து நேரங்களிலும் அவரால் பந்தை ஸ்டம்ப் லைனில் பிட்ச் செய்ய முடியும். அதில் சில பந்துகள் சுழலும். சில பந்துகள் இன்று ஸ்டீவ் ஸ்மித்தை அவுட்டாக்கியதைப் போல் ஸ்லைட் ஆகி செல்லும். அதாவது அவரிடம் 2 அச்சுறுத்தும் வகையிலான பந்துகள் உள்ளது. ஒன்று சுழலக் கூடியது. மற்றொன்று பிட்ச்சான பின் நேராக சென்று பேட்ஸ்மேன்களின் தடுப்பை உடைத்து போல்ட்டாக்கக் கூடியது”

Ricky-Ponting

“அந்த வகையில் இந்த தொடரின் 4 போட்டிகளிலும் முழுமையாக அசத்தும் அளவுக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கும் பட்சத்தில் இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அவர் தான் அதிக விக்கெட்டுகளை எடுக்கும் பவுலராக இருப்பார்” என்று கூறினார். அப்படி முதல் போட்டியில் தோல்விக்கு காரணமாக அமைந்த ரவீந்திர ஜடேஜா உண்மையாகவே ஆஸ்திரேலியா அணியினருக்கு தற்சமயத்தில் தூங்காத இரவுகளை கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: இத்தனை விக்கெட்டுகளை அஷ்வின் அசால்ட்டா எடுக்க காரணமே இதுதான் – சுனில் கவாஸ்கர் பேட்டி

மேலும் ரிக்கி பாண்டிங் கூறியது போல் இத்தொடரில் ரவீந்திர ஜடேஜா அதிக விக்கெட்டுகளை எடுக்கவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் கடைசியாக கடந்த 2017இல் இந்திய மண்ணில் நிகழ்ந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அஷ்வினை மிஞ்சி 25 விக்கெட்களை சாய்த்து அதிக விக்கெட்கள் எடுத்த வீரராக சாதனை படைத்த அவர் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement