42 வயசு வெறும் 20 பந்துகள்.. முடிஞ்சு போனதா சொன்ன தோனி இந்த இம்பேக்ட் செய்றாரு.. பாண்டிங் பாராட்டு

- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தக்க வைத்துள்ளன. அந்த வரிசையில் 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியை 4 கோடிக்கு தக்க வைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை 5 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடர் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறார். அதனாலேயே அவரை 2025 ஐபிஎல் தொடரில் விளையாட வைப்பதற்காக அன்கேப்ட் பிளேயர் எனும் விதிமுறையை மீண்டும் பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. முன்னதாக 2020 சீசனில் கேரியரிலேயே முதல் முறையாக தோனி ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சென்னை தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:

அதனால் தோனியின் கேரியர் முடிந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அப்போது தன்னுடைய உடலை மெருகேற்றி இன்னும் ஃபிட்டாக மாறிய தோனி அடுத்த வருடமே சிறப்பாக விளையாடி 2021 ஐபிஎல் கோப்பையை சென்னை வெல்ல உதவினார். மேலும் சமீபத்திய வருடங்களில் முழங்காலில் காயத்தை சந்தித்த காரணத்தால் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே தோனி களமிறங்கி வருகிறார்.

ஆனால் அந்த வாய்ப்பிலும் அதிரடியான பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்ட அவர் வயதானாலும் ஸ்டைல் மாறவில்லை என்பதை நிரூபித்தார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக சுமாராக விளையாடிய தோனி தம்மை தாமே முன்னேற்றிக்கொண்டு வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

42 வயதிலும் அசத்தல்:

“2 வருடங்களுக்கு முன்பாக தோனி மோசமான சீசனை கொண்டிருந்தார். ஆனால் கடந்த வருடம் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் பழைய தோனியை போல் தாக்கத்தை ஏற்படுத்தினார். இப்போதும் அதே நிலைமை இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது சிஎஸ்கே அணி தோனியின் சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதற்காக முழு தொடரிலும் விளையாட வைக்காமல் சில போட்டிகளில் ஓய்வு கொடுக்கலாம்”

இதையும் படிங்க: அப்படி ஒன்னும் தேவையில்லை.. ஆஸியில் ரோஹித்துக்கு பதில் அவரை கேப்டனா போடுங்க.. கவாஸ்கர் அட்வைஸ்

“கேப்டனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் சென்னை அணியில் தோனி இருந்தாலே தலைமைப் பொறுப்பில் முக்கிய பண்புகளை கொண்டு வருவார். சிறந்த வீரர்கள் எப்போதுமே 10, 12, 14 வருட கேரியரில் தங்களுடைய உச்சகட்ட செயல்பாடுகளை தொடர்ந்து வெளிப்படுத்துவதற்கான வழியை கையாள்வார்கள். இப்போதெல்லாம் அவர் 20 பந்துகள் கொண்ட இன்னிங்ஸ் மட்டுமே விளையாடுகிறார். ஆனாலும் அந்த வாய்ப்பிலும் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்” என்று கூறினார்.

Advertisement