- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விருதுக்கு தகுதியானவர்.. அவரை விட ஒரு சிறந்த பிளேயர் இருக்கார்ன்னு சொல்றது கஷ்டம்.. ரிக்கி பாண்டிங் பாராட்டு

ஐசிசி 2024 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு விராட் கோலி, ஹர்திக் பாண்டியா கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைவருமே முக்கிய பங்காற்றினர். இருப்பினும் பந்து வீச்சு துறையில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா 15 விக்கெட்டுகள் எடுத்தார்.

குறிப்பாக தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்த அவர் இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதனால் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்நாயகன் விருது வென்ற முதல் பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையையும் ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.

- Advertisement -

பாண்டிங் பாராட்டு:
தம்முடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணிகளை திணறடிக்கும் அவர் சமீபத்திய வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அதனால் வாசிம் அக்ரம், மைக்கேல் வாகன் போன்ற பல முன்னாள் வீரர்களும் அவரை உலகின் தலைசிறந்த பவுலர் என்று தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ராவை விட சிறந்த பவுலர் இருக்கிறார் என்று வாதிடுவது கடினம் என ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அனைத்து வகையான சூழ்நிலையிலும் புதிய பந்திலும் பழைய பந்திலும் அவர் அசத்துவதாக பாண்டிங் பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “பும்ரா ஒரு நட்சத்திரம். நீண்ட காலமாக அசத்தும் அவரை விட தற்சமயத்தில் இந்த உலகில் சிறந்த பவுலர் இருக்கிறார் என்று வாதிடுவது மிகவும் கடினமான ஒன்றாகும். அவர் புதிய மற்றும் பழைய பந்தின் ஸ்பெஷலிஸ்ட்”

- Advertisement -

“சமயத்தில் அவரைப் போன்ற பவுலர்கள் உலகில் அதிகமாக இல்லை. இந்த உலகக் கோப்பையில் அவருடைய பவுலிங் நம்பர்களை நான் பார்க்கிறேன். இந்த மொத்த உலகக் கோப்பையிலும் ஓவருக்கு 4 ரன்கள் மட்டுமே கொடுத்து பந்து வீசியுள்ள அவர் தொடர்நாயகன் விருதை வெல்வதற்கு தகுதியானவர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: உங்களுக்கான மரபை உருவாக்கனும்ன்னா இதுல கவனம் செலுத்துங்க.. இந்திய வீரருக்கு வாசிம் அக்ரம் அறிவுரை

முன்னதாக இந்த உலகக் கோப்பையில் பும்ரா ஓவருக்கு 4.17 என்ற எக்கனாமியில் பந்து வீசினார். அதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் மிகவும் குறைந்த எக்னாமியை பதிவு செய்த வீரர் என்ற சுனில் நரேன் சாதனையை உடைத்த பும்ரா புதிய சாதனையையும் படைத்தார். அந்த வகையில் வரும் காலங்களிலும் ஐசிசி தொடர்களில் அவர் இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -