உங்களுக்கான மரபை உருவாக்கனும்ன்னா இதுல கவனம் செலுத்துங்க.. இந்திய வீரருக்கு வாசிம் அக்ரம் அறிவுரை

Wasim Akram 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா சர்வதேச 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சு துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா 15 விக்கெட்டுகள் எடுத்து தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.

அதே போல இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக பந்து வீசி 17 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். பும்ரா அளவுக்கு துல்லியமாக இல்லையென்றாலும் தம்முடைய வயதிற்கு தகுந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை சமன் செய்தார்.

- Advertisement -

வாசிம் அக்ரம் ஆலோசனை:
இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக ஸ்விங் செய்து பந்து வீசுவதாக ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். இருப்பினும் பும்ராவை போல உங்களுக்கென்று தனி பெயரையும் மரபையும் உருவாக்க வேண்டுமெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு அவருக்கு வாசிம் அக்ரம் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“அர்ஷ்தீப் மிகவும் ஈர்க்கக் கூடிய திறமையானவர். அவரிடம் ஸ்விங் மற்றும் வேகம் இருப்பதால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் அவர் புதிய பந்தில் கண்ணியமாக செயல்படுகிறார். எனவே இந்திய அணியின் வழக்கமான பந்து வீச்சாளராக இருக்கும் திறனை அவர் பெற்றுள்ளார் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்த வேண்டுமென்ற எண்ணம் அவருடைய மனதில் இருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் நீங்கள் டி20 போட்டிகளில் விளையாடினால் பணம் சம்பாதிப்பீர்கள். டி20 கிரிக்கெட்டில் அசத்தினால் ஒரு வருடம் உங்களுக்கான பெயர் கிடைக்கும். ஆனால் உங்களுக்கான மரபை விட்டுச் செல்ல விரும்பினால் நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பற்றி நினைக்க வேண்டும்”

இதையும் படிங்க: டி20 உலககோப்பை இறுதிப்போட்டிக்கு முன் கேப்டன் ரோஹித் சர்மா எங்களிடம் சொன்னது இதுதான் – விவரம் இதோ

“அங்கே அசத்தினால் தான் ஓய்வு பெற்ற பின்பும் இவரைப் போன்ற பவுலர் விளையாடவில்லை என்று 10 – 20 வருடங்கள் கழித்தாலும் மக்கள் உங்களைப் பற்றி பேசுவார்கள். எனவே அவரைப் போன்ற இளம் பவுலர்கள் இதை தங்களுடைய மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதை செய்வதற்கான திறன் அவரிடம் இருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. அவருக்கு நான் பத்துக்கு 8 மதிப்பெண் கொடுப்பேன்” என்று கூறினார்.

Advertisement