IPL 2023 : ரிஷப் பண்டிற்காக மைதானத்தில் ரிக்கி பாண்டிங் செய்த மரியாதை – சூப்பர் தகவல் இதோ

Rishabh-Pant
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று இரவு லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று தங்களது அணி முதலில் பந்து வீசும் என டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அறிவித்தார்.

Kyle Mayers

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது. பின்னர் 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்காரணமாக லக்னோ அணி ஐம்பது ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் செய்த செயல் ஒன்று அனைவரது மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

Rishabh Pant 1

அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்பதால் டெல்லி அணி அவரை தவறு விடுவதில் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு அவர் இந்த தொடரில் விளையாடவில்லை என்றாலும் நிச்சயம் அவர் எங்களுடன் தான் இருப்பார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் இந்த தொடரில் விளையாடாதது குறித்து பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்த வேளையில் அவரது ஜெர்சியை நாங்கள் வைத்திருப்போம் என்று ரிக்கி பாண்டிங் ஏற்கனவே கூறியிருந்ததார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரை விடுங்க என்னோட கனவே இதுமட்டும் தான். அதை நான் சாதிச்சே தீருவேன் – ரோஹித் உறுதி

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணியின் வீரர்கள் அமர்ந்திருந்த டக் அவுட்டின் மீது ரிஷப் பண்டின் ஜெர்சி தொங்கவிடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட ரசிகர்களும் அவரது இந்த செயலை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement