வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை காட்டிய ரிச்சா கோஸ்.. போராட்ட கண்ணீர் வெற்றியாக மாறிய சரித்திரம்

- Advertisement -

இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் கடந்த வருடம் மகளிர் ஐபிஎல் டி20 தொடர் முதல் முறையாக துவங்கப்பட்டது. அந்தத் தொடரின் 2வது சீசன் இந்த வருடம் பெங்களூரு மற்றும் டெல்லி நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்கடித்தது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி சுமாராக விளையாடி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சபாலி வருமா 44 ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 114 ரன்கள் துரத்திய பெங்களூரு அணிக்கு சோபி டேவின் அதிரடியாக விளையாடி 32 (27) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

வட்டமான வாழ்க்கை:
ஆனால் மறுபுறம் தடுமாறிய ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானதால் போட்டியில் அழுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் எதிர்ப்புறம் நிதானமாக விளையாடிய நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெரி 35 ரன்கள் எடுத்தார். அவருடன் அடுத்ததாக வந்த ரிச்சா கோஸ் 17* (15) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் கொடுத்ததால் 19 ஓவரில் இலக்கை எட்டி பெங்களூரு வென்றது.

குறிப்பாக கடந்த மார்ச் 10ஆம் தேதி இதே டெல்லி அணிக்கு எதிராக இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 181 ரன்களை துரத்திய பெங்களூரு அணிக்கு கடைசி நேரத்தில் ரிச்சா கோஸ் சிறப்பாக விளையாடினார். அவருடைய ஆட்டத்தால் கடைசி ஓவரில் பெங்களூரு அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து போராடிய அவர் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது துரதிஷ்டவசமாக 51 (29) ரன்களில் ரன் அவுட்டானார்

- Advertisement -

அப்படி கடினமாக போராடியும் ஒரு சில இன்ச்களில் அவர் அவுட்டானதால் பெங்களூரு வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக அன்றைய நாளில் ஃபினிஷிங் செய்ய முடியாததை நினைத்து களத்திலேயே ரிச்சா கோஸ் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் இந்த போட்டியில் அதே டெல்லிக்கு எதிராக அதே மைதானத்தில் கடைசி 4 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது பவுண்டரி அடித்த அவர் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: தேவையா இது? கோப்பையை வென்றும் பெங்களூருவை கலாய்த்த ராஜஸ்தான் அணி.. பதிலடி கொடுத்த ஆர்சிபி ரசிகர்கள்

அந்த வகையில் லீக் சுற்றில் வெற்றியை தவற விட்டு கண்கலங்கிய ரிச்சா கோஸ் ஃபைனலில் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்து வாழ்க்கை ஒரு வட்டம் என்பது மீண்டும் காண்பித்தார். அதன் வாயிலாக மகளிர் ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்று ஆர்சிபி சரித்திரம் படைத்தது. அதனால் ஆர்சிபி ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement