தேவையா இது? கோப்பையை வென்றும் பெங்களூருவை கலாய்த்த ராஜஸ்தான் அணி.. பதிலடி கொடுத்த ஆர்சிபி ரசிகர்கள்

- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்த மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி சுமாராக விளையாடி பெங்களூரு அணியின் தரமான பந்து வீச்சில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை நழுவ விட்டது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக சபாலி வர்மா 44 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூர் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா பட்டேல் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கேப்டன் வந்தனா 31, சோபி டேவின் 32, எலிஸ் பெரி 35*, ரிச்சா கோஸ் 17* ரன்கள் எடுத்து 19.3 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். இதன் வாயிலாக மகளிர் ஐபிஎல் தொடரை முதல் முறையாக வென்று பெங்களூரு சாதனை படைத்தது.

- Advertisement -

கலாய்த்த ராஜஸ்தான்:
கடந்த வருடம் மோசமாக விளையாடிய அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன் காரணமாக ஆடவர் அணியை போலவே மகளிர் ஆர்சிபி அணியும் கோப்பையை எப்போதும் வெல்ல மாட்டார்கள் என்று கிண்டல்கள் எழுந்தன. ஆனால் தற்போது கோப்பையை வென்றுள்ள மகளிர் ஆர்சிபி அணி அந்த கிண்டல்களை உடைத்து சாம்பியன் பட்டம் வென்று அனைவரது பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

இந்நிலையில் முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கலாய்க்கும் வகையில் பாராட்டியுள்ளது. அதாவது இந்தியில் ஒளிபரப்பான பிரபல தொலைக்காட்சி தொடரில் “ஒருவர் சிலிண்டரை தூக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு வீட்டுக்குள்” வருவார். ஆனால் “அவர் கொண்டு வந்த சிலிண்டரை அவருடைய மனைவி அசால்டாக இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சமையலறைக்கு” செல்வார்.

- Advertisement -

அந்த வகையில் 2008 முதல் இதுவரை 16 வருடமாக ஆடவர் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வரும் நிலையில் மகளிரணி அசால்டாக 2வது வருடத்திலேயே கோப்பையை வென்றதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கலாய்க்கும் வகையில் பாராட்டியுள்ளது. ஆனால் அதனால் கடுப்பான ஆர்சிபி ரசிகர்கள் அதே தொலைக்காட்சி தொடரில் இருக்கும் நடிகர் மற்றொரு சூழ்நிலையில் சிறைக்குள் இருப்பதைப் போன்ற புகைப்படத்தை ராஜஸ்தான் அணிக்கு பதிலடியாக கொடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணி தோக்க இதுவே காரணம். தானாவே சிக்கிட்டாங்க – முகமது கைப் கருத்து

அதாவது 2016, 2017 ஆகிய வருடங்களில் சூதாட்டப் புகாரில் சிக்கிய ராஜஸ்தான் அணி ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு தடை பெற்றது. அதை சுட்டிக் காட்டும் வகையில் அந்த அணிக்கு ஆர்சிபி ரசிகர்கள் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர். இதை பார்க்கும் பொதுவான ரசிகர்கள் இதெல்லாம் தேவையா என்று ராஜஸ்தான் அணியை கலாய்ப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement