50 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணி தோக்க இதுவே காரணம். தானாவே சிக்கிட்டாங்க – முகமது கைப் கருத்து

Kaif
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது லீக் சுற்றுகளில் தோல்வியையே சந்திக்காமல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இறுதிப் போட்டிக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்றிருந்தது. தாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியிருந்தால் தான் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அவ்வேளையில் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்திய அணி பரிதாப தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை ஐசிசி கோப்பையை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதோடு அந்தவொரு தோல்வி பல கோடி இந்திய ரசிகர்களின் மனதையும் உடைத்தது.

- Advertisement -

இந்நிலையில் ரசிகர்களை போலவே தானும் இந்தியா வெல்ல வேண்டும் என்ற அதிக ஆசையுடன் இருந்து ஏமாற்றத்தை சந்தித்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா கோப்பையை வென்றிருந்தாலும் 2023-ஆம் ஆண்டு உலக கோப்பையில் சிறந்த அணி இந்தியா தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய கைப் கூறுகையில் : இறுதிப் போட்டிக்காக நான் நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு சென்றிருந்தேன். ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே ஆடுகளத்தை சரி பார்த்ததை பார்த்தேன். ஆடுகளம் நிறம் மாறியது.

- Advertisement -

அதேபோன்று புற்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. ஆடுகளத்தின் தன்மையை மாற்றுவது பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அப்படி சொன்னால் அது பொய். ஆடுகளத்தை சுழற்பந்து வீழ்ச்துக்கு சாதகமாக மாற்ற முயற்சிக்காமல் தட்டையான ஆடுகளத்தில் விளையாடி இருந்தால் நிச்சயம் இந்தியா உலகக் கோப்பையை வென்றிருக்கும்.

இதையும் படிங்க : மகளிர் ஐபிஎல் 2024 : கோப்பை வென்ற ஆர்சிபி அணிக்கு பரிசு எத்தனை கோடிகள்? முழு பரிசுப் பட்டியல்

ஏனெனில் இந்திய அணியில் சாம்பியன் வீரர்கள் உள்ளனர். ஆனால் ஆடுகளத்தை மாற்றுவதற்கான முயற்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் இந்திய அணி சிக்கிக்கொண்டு தோல்வியை சந்தித்துள்ளனர் என முகமது கைப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement