மகளிர் ஐபிஎல் 2024 : கோப்பை வென்ற ஆர்சிபி அணிக்கு பரிசு எத்தனை கோடிகள்? முழு பரிசுப் பட்டியல்

WPL 24 Winners
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்த மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றுள்ளது. மார்ச் 17ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி சுமாராக விளையாடி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்கள் எடுக்க பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா படேல் 4, சோபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 114 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் மந்தனா 31, சோபி டேவின் 32, எலிஸ் பெரி 35* ரிச்சா கோஸ் 17* ரன்கள் எடுத்து 19.3 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள்.

- Advertisement -

பரிசு பட்டியல்:
அதன் காரணமாக ஐபிஎல் கோப்பையை தொட முடியாது என்ற கிண்டல்களை சுக்கு நூறாக உடைத்த பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த தொடரில் கொடுக்கப்பட்ட பரிசு தொகை பற்றிய விவரங்களை பார்ப்போம். முதலாவதாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வெற்றிக் கோப்பையுடன் 6 கோடி ரூபாய் முதல் பரிசாக கொடுக்கப்பட்டது.

மறுபுறம் கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் போராடி ஃபைனலில் தோல்வியை சந்தித்த டெல்லிக்கு 3 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் இந்த தொடரில் அதிக ரன்கள் (341) குவித்து பெங்களூரு வீராங்கனை எலிஸ் பெரி சாதனை படைத்தார். அவருக்கு ஆரஞ்சு தொப்பி மற்றும் 5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

- Advertisement -

அதே போல பெங்களூரு வீராங்கனை ஸ்ரேயங்கா படேல் இந்த வருடம் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனையாக சாதனை படைத்தார். அவருக்கு ஊதா தொப்பியுடன் 5 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. அத்துடன் ஃபைனலில் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகி விருது வென்ற சோபி மோலினக்ஸ் 2.5 லட்சம் பரிசுத்தொகையை வென்றார்.

இதையும் படிங்க: இனிமேல் ஈ சாலா கப் நம்தே சொல்லாம அதை சொல்லுங்க.. ஆர்சிபி ரசிகர்களுக்கு மந்தனா ஸ்பெஷல் கோரிக்கை

அது போக இந்த தொடர் முழுவதும் அசத்தி தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு 5 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது. மேலும் வளர்ந்து வரும் வீராங்கனை விருது வென்ற ஸ்ரேயங்கா படேல், அதிக சிக்ஸர்கள் அடித்த சபாலி வர்மா, ஃபைனலில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய சபாலி வர்மா, தொடர் முழுவதும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய ஜார்ஜியா வேர்காம் ஆகியோருக்கு தலா 5 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது.

Advertisement