இனிமேல் ஈ சாலா கப் நம்தே சொல்லாம அதை சொல்லுங்க.. ஆர்சிபி ரசிகர்களுக்கு மந்தனா ஸ்பெஷல் கோரிக்கை

Mandhana WPL
- Advertisement -

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி ஷபாலி வர்மா 44, மெக் லென்னிங் 23 ரன்கள் எடுத்ததால் 64/0 என்ற வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் அதன் பின் அபாரமாக பந்து வீசி டெல்லியை 11 ரன்களுக்கு சுருட்டிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக சோபி மோலினேக்ஸ் 3, ஸ்ரேயங்கா பட்டேல் 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 114 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு கேப்டன் மந்தனா 31, சோபி டேவின் 32, எலிஸ் பெரி 35* ரிச்சா கோஸ் 17* ரன்கள் எடுத்து 19.3 ஓவரிலேயே வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள்.

- Advertisement -

மந்தனா ஸ்பெஷல்:
அதனால் டெல்லி மீண்டும் பரிதாபமாக ஃபைனலில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. ஆனால் மகளிர் ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக வென்று ஆர்சிபி அணி சாதனை படைத்தது. இந்நிலையில் இத்தொடரில் பெங்களூருவில் நடந்த முதற்கட்ட லீக் போட்டிகள் தாங்கள் ஃபைனல் செல்வதற்கு உதவியதாக கேப்டன் மந்தனா கூறியுள்ளார்.

அதை விட தற்போது கோப்பையை வென்று விட்டதால் இனிமேல் கன்னடத்தில் ஆர்சிபி ரசிகர்கள் ஈ சாலா கப் நம்தே என்று சொல்வதற்கு பதிலாக ஈ சாலா நம்மது என்று சொல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்ட அவர் சாம்பியன் பட்டம் வென்ற பின் பற்றி பேசியது பின்வருமாறு. “உணர்வு இன்னும் குறையவில்லை. இந்த உணர்ச்சியில் இருந்து வெளிவருவது கடினமாக உள்ளது”

- Advertisement -

“ஆனால் நான் பெருமைப்படுகிறேன் என்ற விஷயத்தை சொல்கிறேன். பெங்களூருவில் விளையாடிய போட்டிகள் எங்களுக்கு நன்றாக இருந்தது. டெல்லிக்கு வந்ததும் நாங்கள் 2 மோசமான தோல்விகளை சந்தித்தோம். அப்போது சரியான நேரத்தில் முன்னேற வேண்டும் என்று பேசினோம். இந்த போட்டிகள் சரியான நேரத்தில் உச்சத்தை தொடும். கடந்த ஆண்டு எங்களுக்கு எது சரி தவறு என்பது போன்ற நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுத்தது”

இதையும் படிங்க: வீடியோ காலில் மகளிர் ஆர்சிபி அணியை வாழ்த்திய விராட் கோலி.. இன்ஸ்டாகிராமில் தெரிவித்த வாழ்த்து செய்தி இதோ

“அணி நிர்வாகத்திற்கு தம்ஸ் அப். நான் மட்டும் கோப்பையை வெல்லவில்லை. மொத்த அணியும் கோப்பையை வென்றது. இது என்னுடைய டாப் 5 வெற்றியில் ஒன்றாக இருக்கும். உலகக்கோப்பை முதலாவதாக இருக்கலாம். மேலும் விஸ்வாசமான ஆர்சிபி ரசிகர்களிடமிருந்து ஈ சாலா கப் நம்தே என்ற ஒரு கருத்து எப்போதும் வந்து கொண்டிருக்கும். இனிமேல் அது ஈ சாலா கப் நம்மது. கன்னடம் என்னுடைய மொழி கிடையாது. ஆனால் இதை ரசிகர்களுக்கு சொல்வது முக்கியம்” என்று கூறினார்.

Advertisement