ஏலத்தில் எனக்கு கிடைத்த பணத்தில் என் அம்மா அப்பாவிற்கு இதை செய்ய வேண்டும் – ரிச்சா கோஷ் நெகிழ்ச்சி

Richa-Ghosh
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமான தொடர் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் ஐபிஎல் தொடருக்கு இருக்கும் ரசிகர்கள் வேறுயெந்த தொடருக்கும் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு ஐபிஎல் தொடரானது உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

WPL

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் தொடரானது இந்த ஆண்டு முதல் நடைபெறும் என ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ உறுதியான தகவலை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டு நடைபெற இருக்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மகளிர் வீராங்கனைகளின் ஏலமும் நடைபெற்று முடிந்தது.

இந்த ஆண்டு ஐந்து அணிகளின் சார்பாக மொத்தம் 87 வீராங்கனைகள் இந்த ஏலத்தில் வாங்கப்பட்டனர். இந்த ஏலத்தில் 30 வீராங்கனைகள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மொத்தம் 448 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 87 வீராங்கனைகளில் தற்போதைய இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஒரு கோடியே 90 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.

Richa Ghosh 1

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்டோர் மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்த ரிச்சா கோஷ் திகழ்ந்தார். அவர் ஒரு திறமையான விக்கெட் கீப்பர் என்பது மட்டுமின்றி ஒரு அதிரடியான ஃபினிஷர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிரடியான ஆட்டத்தினால் போட்டியின் போக்கையே மாற்றக்கூடிய தன்மை உடைய இவரை பெங்களூரு அணி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இப்படி தனக்கு கிடைத்த இந்த பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறார் என்பது குறித்தும் அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : என்னுடைய நீண்ட நாள் கனவு ஒன்று இருக்கிறது. அதைத்தான் இந்த பணத்தை வைத்து நான் செய்யப் போகிறேன்.

இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து – முதன்முறையாக வாய் திறந்த ஷிகர் தவான்

அந்த வகையில் எனது பெற்றோருக்கு நான் கொல்கத்தாவில் ஒரு வீடு வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனவே அவர்களுக்காக சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி அவர்களுக்கு பரிசளிப்பதே என்னுடைய விருப்பம் என ரிச்சா கோஷ் தனது உணர்வுகளை நெகிழ்ச்சியாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement