ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து – முதன்முறையாக வாய் திறந்த ஷிகர் தவான்

Shikhar-Dhawan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ துவக்க வீரரான ஷிகர் தவான் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 167 ஒருநாள் போட்டிகள், 34 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இவருக்கு இந்திய அணியில் போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார். தற்போது 37 வயதை எட்டியுள்ள தவான் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் பரிசீலனை பட்டியலில் கூட இடம்பெறவில்லை.

Dhawan

- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐசிசி கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பிறகு எந்த ஒரு ஐசிசி தொடரையும் கைப்பற்றவில்லை என்பதனால் தற்போது இளம் வீரர்களான இஷான் கிஷன், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ் என பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அணியில் அனுபவமும், இளமையும் கலந்த வீரர்களை வைத்து பலமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வேளையில் தவானிற்கு வாய்ப்பு முற்றிலுமாக மங்கிவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 24 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியிருந்தபோது 22 போட்டிகளில் தவான் இடம் பெற்று இருந்தாலும் அவரது சராசரி ரன்கள் 34 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 80-க்கும் குறைவாக இருப்பதினால் அவர் இந்த ஆண்டு துவக்க முதலிலே அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி அவருக்கு பதிலாக இந்திய அணியில் இடம் பிடித்த துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவருமே ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இரட்டை சதத்தை அடித்து தங்களது திறமையை நிரூபித்துள்ளதனர்.

Rohit and Dhawan

இதன்காரணமாக இனி வரும் போட்டிகளிலும் அவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தவான் இனி ஒருநாள் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் தான் அணியிலிருந்து புறக்கணிக்கப்படுவது குறித்து முதல் முறையாக பேசியுள்ள தவான் கூறுகையில் : வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

- Advertisement -

அதனை எப்படி கையாள வேண்டும் அதிலிருந்து என்னென்ன விடயங்களை கற்க வேண்டும் என்பது நம்மிடம் தான் உள்ளது. நான் என்னால் முடிந்தவரை இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு விட்டேன். என்னை விட யாரேனும் சிறப்பாக செயல்பட்டால் அது அணிக்கு நல்லது தான். எனவே அதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் அணிக்குள் வருவேனா? மாட்டேனா? என்பதை அணியின் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்.

இதையும் படியாக : இந்திய அணிக்கு எதிரா ஆஸ்திரேலியா இதை மட்டும் பண்ணவே முடியாது – சைமன் டவுல் ஓபன்டாக்

நான் எனது பணிகளை தொடர்ச்சியாக செய்து வருகிறேன். அதோடு என்னுடைய பயிற்சியையும் நான் எப்போதும் விட்டுக் கொடுத்தது கிடையாது. என்னுடைய வாய்ப்பு எனக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால் கண்டிப்பாக அது கிடைக்கும் அதுவரை நான் விளையாடிக் கொண்டுதான் இருப்பேன் என்றும் இனி எனது கரியரில் என்ன நிகழ்வுகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள மகிழ்ச்சியுடன் தயாராக காத்திருக்கிறேன் என தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement