இன்றைய ரிசர்வ் டே போட்டியாவது முழுசா நடைபெறுமா ? வெளியான வானிலை அறிக்கை – விவரம் இதோ

WTC-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி கடந்த 18ஆம் தேதி துவங்கியது. போட்டியின் முதல் நாளில் இருந்தே மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். ஏனெனில் மிகப்பெரிய தொடராக நடைபெற்று வரும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஏதாவது ஒரு அணி வெற்றியை பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

WTC

- Advertisement -

ஆனால் போட்டி தொடங்கிய முதல் நாள் மற்றும் நான்காவது நாள் என இரண்டு முழு நாட்கள் மழையின் காரணமாக முழுவதுமாக தடைபட்டது. அதுமட்டுமின்றி மீதமுள்ள மூன்று நாட்களிலும் முழுவதுமாக ஓவர் வீச படவில்லை. இந்நிலையில் தற்போது இன்று நடைபெற இருக்கும் ரிசர்வ் டே போட்டியாவது முழுவதுமாக நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 ரன்களை குவிக்க நியூசிலாந்து அணியோ 249 ரன்கள் குவித்து 32 ரன்கள் முன்னிலை பெற்றது. அதன் பின்னர் தங்களது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி ரோஹித் மற்றும் கில் ஆகியோரது விக்கெட்டை இழந்து தற்போது இரண்டாவது இன்னிங்சில் 64 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்த நிலையில் விளையாடி வருகிறது.

Rain

இன்று ஆறாவது நாள் முழுமையாக நடைபெற்றால் இரண்டு அணிகளில் ஒரு அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியாவது முழுவதுமாக நடைபெறுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் சவுத்தாம்ப்டன் நகரின் வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது : ஏஜஸ் பவுல் மைதானத்தில் ஐந்தாவது நாளில் இருந்தது போன்றே வானிலை ஆறாவது நாளிலும் தொடர வாய்ப்பு உள்ளது.

kohli 1

மழைக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் அவ்வப்போது மேகக்கூட்டங்கள் வந்து செல்லும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றைய போட்டியின் மூன்று செஷன்களும் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் கூடுதலாக சில ஓவர்கள் வீசப்படும் என்பதால் நிச்சயம் இரு அணிகளுமே வெற்றியைக் குறி வைத்து விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

Advertisement