ஐ.பி.எல் தொடரும் போச்சி. டி20 உலகக்கோப்பையும் வந்துருச்சி. என்னதான் ஆகும் தோனியின் நிலைமை – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரும் நடக்கவில்லை! அடுத்த திட்டமும் என்னவென்று தெரியவில்லை! தோனியின் கனவு அவ்வளவு தானா? உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார். அந்த போட்டியில் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றிக்கு அருகில் சென்று விட்டது. அதற்கு காரணமும் தோனிதான். ஆனால் இப்படியே தோனி மௌனம் காத்தால் கண்டிப்பாக அவரது ரசிகர்கள் அவரை கடைசியாக இந்திய அணியின் ஜெர்ஸியில் பார்த்து விட்டனர் என்று அர்த்தம்.

Dhoni

- Advertisement -

ஆனால் எதிர்பாராத விதமாக இந்திய அணி தோல்வியை தழுவியது. அதன்பின்னர் இந்திய ரசிகர்களை போல் அவரும் அதிர்ச்சி அடைந்தார். கிரிக்கெட்டிற்கு தற்காலிக முழுக்கு போட்டார். தற்போது தற்காலிகமாக ஓய்வில் இருக்கிறேன் என்று அடுத்தடுத்து தொடர்களுக்கு அறிவித்தார். அப்போது மைதானத்திற்கு வெளியே சென்றவர் தற்போது வரை திரும்பவேயில்லை. அதன் பின்னர் 3 தொடர்களுக்கு அவரது பெயரை சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் சொல்லிவிட்டார்.

இதன் காரணமாக அவரை பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியது. தற்போது 38 வயதாகிறது அவருக்கு. ஆனால் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற கனவும் இருக்கிறது. இதன் காரணமாக ஒப்பந்த பட்டியலிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்ட பிறகு உடனடியாக பயிற்சிக்கு திரும்பினார். அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சேர்ந்து கடுமையாக பயிற்சி செய்து கொண்டிருந்தார். எப்படியும் இந்த முறை ஐபிஎல் தொடரில் ருத்ரதாண்டவம் ஆடி, இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வைரஸ் காரணமாக அதுவும் பாழாய்ப் போனது.

Dhoni 1

இந்நிலையில் முன்னாள் வீரர்கள் பலரும் அவரை ஓய்வு பெறச் சொல்லி மறைமுகமாக வற்புறுத்தி வருகின்றனர். பலர் அவருக்கு காலம் முடிந்துவிட்டது என்றும் கூறிவருகின்றனர். ஒருபுறம் விவிஎஸ் லட்சுமணன், வீரேந்தர் சேவாக், ஹர்ஷா போக்லே போன்றவர்கள் தோனிக்கு காலம் முடிந்துவிட்டது என்று கூறும் வேளையில் கௌதம் கம்பீர் இவரை ஓய்வு பெறச் சொல்லிக்க்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

இப்படியிருக்க இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹூசைன் ஆகிய இருவரும் தோனி மீண்டும் ஆட வேண்டும் எனவும் அவர் மீண்டும் இந்திய அணிக்கு ஆடினால் அது மிகப்பெரிய சொத்தாக இருக்கும் என்றும் கூறிவருகின்றனர். இப்படி பலரும் பலவாறு கூறிக்கொண்டிருக்க எப்போதும் போல் தோனி தனது மௌனத்தை காத்துக்கொண்டிருக்கிறார்.

Dhoni

வழக்கம்போல் அமைதியாக இருக்கிறார். அவரது ரசிகர்களுக்கு கூட அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. இப்படியே சென்றால் இன்னும் சில மாதங்களில் டோனியின் இந்திய அணி எதிர்கால கனவு கண்டிப்பாக காலாவதி ஆகிவிடும் என்பதே திண்ணம். இப்படியான விமர்சனங்களுக்கும், தன்மீதான கருத்துக்களுக்கும் தோனி வாயைத் திறந்து பதில் சொன்னால் மட்டுமே இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.

Advertisement