இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலுந்து மேலும் ஒரு வீரர் விலகல்.. திரும்பி வர வாய்ப்பில்லை – விவரம் இதோ

Rehan-Ahmed
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் ஆகியோரது தலைமையின் கீழ் அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி எங்கு சென்றாலும் வெற்றிகளை குவித்து வந்த வேளையில் தற்போது இந்திய அணிக்கு எதிராக தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் அந்த அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று பின்தங்கியுள்ளது. மேலும் எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு மிக குறைவாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணியின் சார்பாகவும் சரி, இங்கிலாந்து அணியின் சார்பாகவும் சரி பல வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில வீரர்கள் தனிப்பட்ட சில காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர்.

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் அந்த அணியில் இருந்து பாதியிலேயே வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து அணியை சேர்ந்த 19 வயதான சுழற்பந்து வீச்சாளர் ரேஹன் அகமது தனிப்பட்ட சொந்த பிரச்சனைகள் காரணமாக இங்கிலாந்து திரும்புகிறார் என்றும் அவர் திரும்பி இந்தியாவிற்கு வர மாட்டார் என்பதால் இந்த தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு அவருக்கான மாற்று வீரராக யாரையும் இணைக்கவில்லை என்றும் இதே அணியை வைத்து விளையாடுவோம் என்றும் இங்கிலாந்து நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே சறுக்களை சந்தித்திருக்கும் இங்கிலாந்து அணிக்கு அவரது இந்த விலகல் மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம் – இந்த தொடர் எல்லாருக்கும் லக் தான்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதியான இன்று ராஞ்சி நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement