விராட் கோலி இல்ல. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் இந்திய வீரரான இவர்தான் – ரிதீந்தர் சோதி கருத்து

Reetinder
- Advertisement -

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய அழுத்தத்தில் களமிறங்குகிறது. ஆனால் தற்போது உள்ள இந்திய அணியில் பேட்ஸ்மேன்களில் நிலைமையை பார்க்கும் போது இங்கிலாந்து அணியை சமாளிக்குமா ? என்பது சந்தேகமே.

- Advertisement -

இந்நிலையில் இந்த இந்தியா இங்கிலாந்து தொடர் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரீதிந்தர் சிங் கூறுகையில் : இந்த இங்கிலாந்து தொடரை இந்திய அணி சமாளிக்க வேண்டுமெனில் ரோகித் சர்மா, புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆகவேண்டும். அவர்கள் மூவரால் தான் இங்கிலாந்து அணியை சமாளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் தற்போதைக்கு ரோகித் சர்மா தான் என்று அவர் கூறியுள்ளார். 2013ஆம் ஆண்டு தனது சர்வதேச டெஸ்ட் வாழ்க்கையை துவங்கிய ரோகித் அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்தாலும் அதன் பிறகு டெஸ்ட் அணியில் இருந்து காணாமல் போனார். பிறகு 2019ஆம் ஆண்டு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் அதன்பிறகு தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார்.

rohith

ரோகித் குறித்து அவர் கூறுகையில் : ரோஹித் சர்மாவால் நல்ல துவக்கம் அடிக்க முடிகிறது ஆனால் பெரிய அளவில் ரன்களை மாற்ற முடியவில்லை. இந்திய அணி ரோகித் சர்மா, விராத் கோலி, புஜாரா ஆகியோரையே நம்பி இருக்கிறது. வரும் இங்கிலாந்து தொடரில் அவர்கள் மூவரும் பிரகாசித்தால் மட்டுமே இந்திய அணி இங்கிலாந்து அணியை சமாளிக்கும். தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா தான் உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் என அவர் கூறி உள்ளார்.

rohith 1

மேலும் தற்போது ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வந்தாலும் அவரால் நிச்சயம் ஒரு மிகப்பெரிய ரன் குவிப்பை வழங்கமுடியும், அவர் அந்த அளவு ஒரு ஸ்பெஷலான வீரர். போட்டியின் எந்த நேரத்திலும் அவரால் ஆட்டத்தை திருப்ப முடியும் என ரிதீந்தர் சோதி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement