நீங்க அதே பழைய தோனி இல்ல. புரிஞ்சிக்கிட்டு அந்த இடத்துல பேட்டிங் பண்ணுங்க – ரிதீந்தர் சோதி கோரிக்கை

Reetinder
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று துவங்கி மே 29-ஆம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் நடைபெற உள்ளது. இம்முறை இந்த தொடர் இந்தியாவிலேயே நடைபெற்றாலும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன நிலையில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

IPL

- Advertisement -

கோப்பை வெல்லுமா சென்னை:
இந்த தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு 4-வது முறையாக கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக இருக்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கடந்த 2 வாரங்களாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த அணியில் ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா போன்ற மூத்த வீரர்களுடன் ருதுராஜ் கைக்கவாட், ராஜ்வர்தன் போன்ற இளம் வீரர்களும் மொய்ன் அலி, டேவோன் கான்வே, ட்வயன் ப்ராவோ போன்ற வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். எனவே அனுபவமும் இளமையும் தரமும் நிறைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடமும் அனுபவம் வாய்ந்த கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் 5-வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

csk 1

தடுமாறும் தல தோனி:
இருப்பினும் அந்த அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் படுமோசமான பார்மில் இருந்து வருவது அந்த அணி ரசிகர்களுக்கு கவலை அளிக்கிறது. குறிப்பாக கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து வெற்றிகளை தேடிக் கொடுக்கும் பின்செராக கருதப்படும் அவர் கடந்த 2020 முதல் பழைய தோனியாக விளையாடுவதில்லை என்பதே நிதர்சனமாகும். இந்நிலையில் தோனி என்பவர் கடந்தகாலங்களில் எதிரணிகளை பட்டையை கிளப்பிய அதே பழைய தோனி இல்லை என்பதை அவர் உணர வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ரீதிண்டர் சோதி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி பேட்டிங்கில் மேல் இடங்களில் விளையாட வேண்டும். ஏனெனில் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை எதிரணிகளை பந்தாடிய அதே பழைய பினிசெராக அவர் தற்போது விளையாடுவதில்லை. இருப்பினும் எம்எஸ் தோனி சென்னையின் ஒரு துருப்புச் சீட்டு என்று அறியப்படுபவர். எனவே 10, 11 ஆகிய ஓவர்களின் போது அவர் களமிறங்கி ஓரளவு செட்டாகி விட்டால் அதன்பின் கடைசி நேரத்தில் ரன்களை அதிரடியாக அடிக்க முடியும்” என கோரிக்கை வைத்தார்.

Csk-practice

நியாயமான கோரிக்கை:
அவர் கூறுவது போல 2008 முதல் 2019 வரை கடைசி நேரத்தில் களமிறங்கி பந்துவீச்சாளர்களை பந்தாடிய எம்எஸ் தோனி ஒவ்வொரு சீசனுக்கும் குறைந்தது 300 ரன்களுக்கும் மேல் அடித்து வந்தார். ஆனால் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் முறையாக தடுமாறிய அவர் வெறும் 200 ரன்களை மட்டுமே எடுத்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு அதைவிட மோசமாக தடுமாறிய அவர் வெறும் 114 ரன்கள் மட்டுமே எடுத்து பார்மின்றி தவித்து வருகிறார்.

- Advertisement -

தற்போது 40 வயதை கடந்துவிட்ட அவர் இனியும் பழைய தோனியாக விளையாட முடியாது என்பதால் பேட்டிங் வரிசையில் மேலே களம் இறங்கி சற்று முன்கூட்டியே விளையாடத் தொடங்கி செட் ஆகிவிட்டால் அதன்பின் அவரால் ரன்கள் அடிக்க முடியும் என ரீதிண்டர் சோதி நியாயமான கோரிக்கை வைத்துள்ளார்.

jadeja 1

அதேபோல் கடந்த 2 வருடங்களாக தோனி தடுமாறி வரும் நிலையில் அவரின் இடத்தில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்கள் குவித்து சென்னை அணிக்கு வெற்றிகளை தேடித் தரும் புதிய பினிசராக ரவீந்திர ஜடேஜா உருவெடுத்துள்ளார். அதுபற்றி ரீதிண்டர் சோதி மேலும் பேசியது பின்வருமாறு. “ரவிந்திர ஜடேஜாவின் பார்ம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக சமீபத்தில் நடந்த மொஹாலி டெஸ்ட் போட்டியில் அவர் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. அது சென்னை அணிக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : கோப்பை தக்கவைக்குமா ந்டப்பு சாம்பியன் சென்னை, பலம், பலவீனம் என்ன – ஒரு அலசல்

அதே போலவே இந்த ஐபிஎல் தொடரிலும் அவர் செயல்பட்டால் கண்டிப்பாக அவரால் அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியும். எம்எஸ் தோனி, ரவிந்திர ஜடேஜா போன்ற மிகப் பெரிய வீரர்கள் சென்னை அணிக்காக பொறுப்புடன் விளையாட வேண்டும்” என கூறினார்.

Advertisement