ஐபிஎல் 2022 : கோப்பை தக்கவைக்குமா ந்டப்பு சாம்பியன் சென்னை, பலம், பலவீனம் என்ன – ஒரு அலசல்

Dhoni-3 IPL
- Advertisement -

ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் மும்பையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

CSK-2

- Advertisement -

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்:
குறிப்பாக நடப்பு சாம்பியனாக இருக்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இதர அணிகளை காட்டிலும் கடந்த 2 வாரத்திற்கு முன்பாகவே தங்களது வலைப் பயிற்சியைத் தொடங்கினர். அதிலும் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட அனைத்து அணிகளும் மும்பை நகரில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை அணி மட்டும் ஸ்பெஷலாக குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஸ்பெஷல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இம்முறை ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, ட்வைன் பிராவோ போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் ருதுராஜ் கைக்வாட், ராஜ்வர்தன் போன்ற இளமை வாய்ந்த வீரர்களும் சென்னை அணியில் இடம் பிடித்துள்ளனர். அவர்களுடன் டேவோன் கான்வே, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான் போன்ற தரமான வெளிநாட்டு வீரர்களும் உள்ளதால் இந்த வருடமும் அனுபவம் மிக்க கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் 5-வது முறையாக கோப்பையை வென்று சென்னை அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Csk-practice

அணி எப்படி உள்ளது:
சொல்லப்போனால் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் முறையாக கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அதற்கு அடுத்த 2011 சீசனிலும் கோப்பையை வென்று ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த முதல் அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த வரிசையில் இந்த வருடமும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியுமா, அந்த அணியில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள் போன்றவற்றை அலசுவோம் வாங்க:

- Advertisement -

பலம் என்ன:
1. முதலில் ஓபனிங் இடத்தில் கடந்த வருடம் 635 ரன்களை விளாசி அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்து ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வீரர் ருதுராஜ் கைக்கவாட் இந்தமுறை மீண்டும் களம் இறங்குவது சென்னை அணிக்கு பலமாகும். இருப்பினும் கடந்த வருடம் அவருக்கு சமமாக 633 ரன்கள் விளாசி சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய டு ப்லஸ்ஸிஸ் இந்த முறை அந்த அணியில் இல்லாதது பின்னடைவாகும்.

ruturaj

இருப்பினும் புதிதாக வாங்கப்பட்டுள்ள நியூசிலாந்தை சேர்ந்த அதிரடி தொடக்க வீரர் டேவோன் கான்வே அவரின் குறையை தீர்ப்பார் என நம்பலாம். ஏனெனில் சமீப காலங்களாக நியூசிலாந்துக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடக்க வீரராக விளையாடி வரும் அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார்.

- Advertisement -

2. அதேபோல் மிடில் ஆர்டரில் மொய்ன் அலி, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, எம்எஸ் தோனி, ரவிந்திர ஜடேஜா என அனுபவமும் தரமும் நிறைந்த வீரர்கள் பலம் சேர்க்கின்றனர். இவர்களுடன் புதிதாக வாங்கப்பட்டுள்ள இளம் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே அந்த அணியின் மிடில் ஆர்டர் துறைக்கு மேலும் பலம் சேர்க்கிறார்.

jadeja

3. ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் மொய்ன் அலி, ரவிந்திர ஜடேஜா, ஷிவம் துபே, ட்வயன் ப்ராவோ, ஆகியோருடன் புதிதாக வாங்கப்பட்ட தென்னாப்பிரிக்க வீரர் ட்வய்ன் பிரிட்டோரியஸ் மற்றும் அண்டர் 19 உலக கோப்பையில் அசத்திய இளம் வீரர் ராஜ்வர்தன் பலம் சேர்க்கிறார்கள்.

- Advertisement -

4. வேகப்பந்து வீச்சுத்துறையில் ட்வயன் ப்ராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன் ஆகிய தரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வழு சேர்ப்பார்கள் என நம்பலாம்.

deepak 1

பலவீனம் என்ன:
1. அந்த அணிக்காக கடந்த சில வருடங்களாக அபாரமாக செயல்பட்டு பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் என பெயரெடுத்த தீபக் சஹர் இந்த முறை காயத்தால் விலகியுள்ளது சென்னை அணிக்கு மிகப்பெரிய பலவீனமாக மாறியுள்ளது. குறிப்பாக 14 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட அவர் சமீபத்தில் துரதிஷ்டவசமாக காயமடைந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. எனவே பாதி ஐபிஎல் தொடருக்கு பின்புதான் அவர் சென்னை அணியில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்படிப்பட்ட நிலையில் ஷார்துல் தாகூரும் இல்லாத காரணத்தால் ஒரு நல்ல இந்திய வேகப்பந்துவீச்சாளர் இல்லாமல் சென்னை தடுமாறுகிறது.

எனவே அந்த இடத்தை அண்டர்-19 இளம் வீரர்கள் ராஜ்வர்தன் ஹங்க்ரேகர், துஷார் தேஷ்பாண்டே அல்லது கேஎம் ஆசிப் போன்ற அனுபவம் இல்லாத வீரர்களை வைத்து சமாளிக்க வேண்டிய நிலைமைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. இந்த இளம் வீரர்கள் ஐபிஎல் தொடர் போன்ற மிகவும் அழுத்தம் நிறைந்த மிகப்பெரிய தொடர்களில் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரியாது.

Rayudu

2. சென்னை அணிக்கு பலமாக கருதப்படும் மிடில் ஆர்டர் தான் ஒரு முக்கியமான பலவீனம் என்றும் கூறலாம். ஏனென்றால் அதில் இடம் வகிக்கும் மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தவிர கேப்டன் எம்எஸ் தோனி, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு போன்ற முக்கியமான மிடில் ஆர்டர் வீரர்கள் கடந்த பல மாதங்களாக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடவில்லை. மேலும் 35 வயதை கடந்துவிட்ட இவர்கள் கடந்த சில ஐபிஎல் தொடர்களில் கூட பெரிய அளவிலான ரன்களை குவித்து பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

3. அதேபோல் தீபக் சஹர் போன்ற முதன்மையான வீரர் காயம் அடைந்துள்ள தருணத்தில் அவரின் இடத்தை நிரப்ப ஆரம்பத்திலேயே சென்னை தடுமாறுகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடங்கியபின் பாதி தொடரின் போது ஏதேனும் ஒரு முக்கிய வீரர் காயமடைந்தால் அந்த இடத்தை நிரப்பும் அளவுக்கு சென்னை அணியின் பெஞ்சில் பெரிய ஸ்டார் வீரர்கள் இல்லாதது ஒரு குறையாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலியை போலவே சதம் அடிக்க முடியாமல் திணறும் டாப் ஸ்டார் வீரர் – இது தெரியமா போச்சே

எது எப்படி இருந்தாலும் அணியில் குறைகள் இருந்தாலும் அதை சரி செய்து இதற்கு முந்தைய காலகட்டங்களில் சென்னை அணி கோப்பைகளை வென்று காட்டியுள்ளது. குறிப்பாக இதர அணிகளில் சொதப்பிய வீரர்கள் கூட எம்எஸ் தோனியின் கீழ் சென்னை அணியில் விளையாடினால் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்ற கதைகள் உள்ளது. எனவே குறைகளை நிறையாக்கி அணியில் உள்ள வீரர்களின் திறமையை பயன்படுத்தி கேப்டன் எம்எஸ் தோனி 5-வது முறையாக சென்னைக்கு மீண்டும் ஒரு கோப்பையை வென்று கொடுப்பார் என நம்பலாம். அதற்கான தகுதியும் அந்த அணியில் உள்ளது.

Advertisement